
நார்வே செஸ் போட்டியின் 8-ஆவது சுற்றையும் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் டிரா செய்து புள்ளித் தரவரிசையில் ஆறாவது இடத்தைப் பிடித்தார்.
நார்வே செஸ் போட்டி நார்வேயின் ஸ்டவாங்கர் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியின் நேற்று நடைபெற்ற 8-ஆவது சுற்றில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் ரஷியாவின் செர்ஜி கர்ஜாகினை தோற்கடித்தார்.
அதே நேரத்தில் ரஷியாவின் விளாதிமிர் கிராம்னிக், பிரான்ஸின் மேக்ஸைம் வச்சியரிடம் தோற்றார்.
அமெரிக்காவின் ஹிகாரு நாகமுரா, சகநாட்டவரான வெஸ்லோ சோவுடன் டிரா செய்தார்.
இதேபோல் அமெரிக்காவின் ஃபாபியோனா கருணா - நெதர்லாந்தின் அனிஷ் கிரி இடையிலான ஆட்டமும் டிராவில் முடிந்தது.
இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், ஆர்மீனியாவின் லெவோன் ஆரோனியனுடன் டிரா செய்தார்.
இன்னும் ஒரு சுற்று மட்டுமே மீதமுள்ள நிலையில் லெவோன் ஆரோனியன் 5.5 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
ஹிகாரு நாகமுரா ஐந்து புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
நெதர்லாந்தின் அனிஷ் கிரி 4.5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
அமெரிக்காவின் வெஸ்லே சோ, ரஷியாவின் விளாதிமிர் கிராம்னிக் ஆகியோர் தலா 4 புள்ளிகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
ஆனந்த், கருணா, மேக்ஸைம் வச்சியர், கார்ல்சன் ஆகியோர் தலா 3.5 புள்ளிகளுடன் ஆறாவது வது இடத்தைப் பிடித்துள்ளனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.