நடப்பு உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்தினார் இந்தியாவின் பிரணாய்…

Asianet News Tamil  
Published : Jun 17, 2017, 09:58 AM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
நடப்பு உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்தினார் இந்தியாவின் பிரணாய்…

சுருக்கம்

Indian player defeated the worlds and Olympic champion

இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் நடப்பு உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் சென் லாங்கை வீழ்த்தினார் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய்.

இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற காலிறுதியில் பிரணாய், நடப்பு உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் சென் லாங்குடன் மோதினார்.

இதில், 21-18, 16-21, 21-19 என்ற செட் கணக்கில் சென் லாங்கை தோற்கடித்து வெற்றிப் பெற்றார்.

சூப்பர் சீரிஸ் போட்டியில் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் பிரணாய், அடுத்ததாக ஜப்பானின் கஜுமாஸா சகாயை சந்திக்கிறார்.

முன்னதாக கஜுமாஸா தனது காலிறுதியில், இங்கிலாந்தின் ராஜீவ் அவுசெப்புடன் மோதியதில் 13-21, 21-16, 21-10 என்ற செட் கணக்கில் அவுசெப்பை தோற்கடித்தார்.

மற்றொரு காலிறுதியில் ஸ்ரீகாந்த், சீன தைபேவின் ஜூ வெய் வாங்குடன் மோதி 21-15, 21-14 என்ற நேர் செட்களில் வென்றார்.

ஸ்ரீகாந்த் தனது அரையிறுதியில் தென் கொரியாவின் சன் வான் ஹோவை எதிர்கொள்கிறார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

எல்லை மீறி போறீங்க டா.. RCBக்கு எதிராக பஞ்சாயத்தை கூட்டிய CSK..! BCCIயிடம் முறையீடு..
CSK Replacement: கலீல் அவுட், CSK-க்கு அடுத்தது யார்? இந்த 3 பௌலர்கள் தான் லிஸ்ட்ல இருக்காங்க!