ரோஹித் சர்மா தேர்வு செய்த ஆஸ்திரேலிய ஆல்டைம் சிறந்த டெஸ்ட் அணி!! முன்னாள் கேப்டனை ஒதுக்கிவிட்டுட்டாரு ஹிட்மேன்

By karthikeyan VFirst Published Feb 19, 2019, 12:51 PM IST
Highlights

ஆஸ்திரேலிய அணி, இந்தியாவிற்கு வந்து ஆட உள்ள நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா, தனக்கு பிடித்த ஆல்டைம் 11 சிறந்த வீரர்களை கொண்ட ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியை தேர்வு செய்துள்ளார். 
 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிய இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை வென்று சாதனை படைத்தது. அதன்பிறகு நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பியுள்ள இந்திய அணி, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வருகிறது ஆஸ்திரேலிய அணி. இரு அணிகளுக்கும் இடையே 2 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்க உள்ளது. சொந்த மண்ணில் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி, அதேபோலவே சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. 

வரும் 24ம் தேதி மற்றும் 27ம் தேதி ஆகிய தேதிகளில் இரண்டு டி20 போட்டிகள் நடக்கின்றன. அதன்பிறகு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்க உள்ளது. 

ஆஸ்திரேலிய அணி, இந்தியாவிற்கு வந்து ஆட உள்ள நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா, தனக்கு பிடித்த ஆல்டைம் 11 சிறந்த வீரர்களை கொண்ட ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியை தேர்வு செய்துள்ளார். 

அந்த அணியின் தொடக்க வீரர்களாக மேத்யூ ஹைடன் மற்றும் டேவிட் வார்னரை தேர்வு செய்துள்ளார் ரோஹித். ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க், மைக் ஹசி, கில்கிறிஸ்ட், வார்னே, மெக்ராத் ஆகியோரை உள்ளடக்கிய அணிக்கு பாண்டிங்கை கேப்டனாக தேர்வு செய்துள்ளார் ரோஹித் சர்மா. 

ரோஹித் சர்மா தேர்வு செய்துள்ள வீரர்களில் பெரும்பாலானோர் 1990 முதல் 2010ம் ஆண்டு வரையிலான ரிக்கி பாண்டிங்கின் தலைமையில் ஆடிய அணியை சேர்ந்தவர்கள். பாண்டிங் தலைமையிலான அந்த ஆஸ்திரேலிய அணி அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அணியில் சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரராக வலம்வரும் ஸ்மித்தை ரோஹித் சர்மா தேர்வு செய்யவில்லை.

ரோஹித் சர்மா தேர்வு செய்துள்ள ஆல்டைம் ஆஸ்திரேலிய பெஸ்ட் டெஸ்ட் அணி:

மேத்யூ ஹைடன், டேவிட் வார்னர், பாண்டிங்(கேப்டன்), மைக்கேல் கிளார்க், மைக் ஹசி, ஷேன் வாட்சன், கில்கிறிஸ்ட்(விக்கெட் கீப்பர்), ஷேன் வார்னே, பிரெட் லீ, மிட்செல் ஜான்சன், கிளென் மெக்ராத். 
 

click me!