தோனி, கோலியை எல்லாம் அசால்ட்டா தூக்கி எறியும் ரோஹித்!! இந்த ஒண்ணு மட்டும் செஞ்சுட்டா போதும்.. ஹிட்மேன் தான் மாஸ்

By karthikeyan VFirst Published Nov 10, 2018, 4:38 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி வென்றால் இதுவரை எந்த இந்திய கேப்டனும் செய்யாத சம்பவம் ஒன்றை செய்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெறுவார். 
 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி வென்றால் இதுவரை எந்த இந்திய கேப்டனும் செய்யாத சம்பவம் ஒன்றை செய்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெறுவார். 

விராட் கோலி தலைசிறந்த வீரராக இருந்தாலும் அவரது கேப்டன்சியின் மீது பல விமர்சனங்கள் உள்ளன. கள வியூகம், பவுலர்களை பயன்படுத்தும் விதம், வீரர்களுடனான அணுகுமுறை ஆகியவை மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

அதேநேரத்தில் ரோஹித் சர்மா கேப்டனாகும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவரது கேப்டன்சி திறமையை நிரூபித்துவருகிறார். சிறப்பான கேப்டன்சியால் வெற்றிகளை குவித்துவருகிறார். அவரது கேப்டன்சியில் நிதாஹஸ் டிராபி, ஆசிய கோப்பை ஆகிய தொடர்களை இந்திய அணி வென்றது. ரோஹித் சர்மா வெற்றிகளை குவிக்கும்போதெல்லாம் அவரை நிரந்தர கேப்டனாக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தவண்ணம் தான் உள்ளன. 

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலிரண்டு டி20 போட்டிகளை வென்று தொடரை வென்றுள்ள இந்திய அணி, நாளை நடைபெற உள்ள கடைசி போட்டியிலும் வெற்றி பெற்றால், தோனி, கோலி ஆகியோர் கேப்டனாக இருந்து செய்யாத ஒரு மைல்கல்லை ரோஹித் எட்டக்கூடிய வாய்ப்பு உள்ளது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி போட்டியிலும் இந்திய அணி வென்றால், 3-0 என வெஸ்ட் இண்டீஸை ஒயிட் வாஷ் செய்து தொடரை வெல்லும். அப்படி வென்றால், டி20 தொடரில் எதிரணியை 2 முறை ஒயிட்வாஷ் செய்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையையும் சர்வதேச அளவில் மூன்றாவது கேப்டன் என்ற பெருமையையும் ரோஹித் பெறுவார். ஏற்கனவே ரோஹித் சர்மாவின் தலைமையில் ஒருமுறை எதிரணி 3-0 என ஒயிட்வாஷ் செய்யப்பட்டுள்ளது. 

இந்த பட்டியலில் 5 முறை எதிரணிகளை ஒயிட்வாஷ் செய்த பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது முதலிடத்திலும் 3 முறை எதிரணியை ஒயிட்வாஷ் செய்த ஆஃப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஆஃப்கான் இரண்டாமிடத்திலும் உள்ளனர். 
 

click me!