ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடந்த டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் ரோகன் போபண்ணா மற்றும் ருதுஜா போசலே ஜோடி தங்கம் வென்றுள்ளது.
சீனாவின் ஹாங்சோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. இதில், இன்று நடந்த டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் ருதுஜா போசலே ஜோடியானது சீன தைபே ஜோடியான என்-சுவோ லியாங் மற்றும் சுங்-ஹாவோ ஹுவாங்கை எதிர்கொண்டது. இதில், முதல் செட்டை சீன தைபே ஜோடி 6-2 என்று கைப்பற்றினர்.
9th Gold for India in Asian Games....!!!! 🇮🇳
42-year-old Rohan Bopanna & Rutuja Bhosale won Gold in mixed doubles tennis. 🥇
Rohan Bopanna is an ultimate legend in Indian sports.pic.twitter.com/QD4vad4Obf
அதன் பிறகு சுதாரித்துக் கொண்டு விளையாடி 6-3 மற்றும் 10-4 என்று அடுத்தடுத்த செட்டுகளை கைப்பற்றி தங்கம் வென்றுள்ளனர். இதற்கு முன்னதாக நடந்த ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் ராமநாதன் ராம்குமார், சாகேத் மைனேனி ஜோடி வெள்ளி வென்றது.