இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை வார்ம் அப் போட்டிகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு கவுகாத்தி மைதானத்தில் நடக்கிறது.
கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 5 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இத்தொடரில் இடம் பெற்றுள்ள 10 அணிகளும் வார்ம் அப் போட்டியில் விளையாடி வருகின்றன. நேற்று இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலாக நடந்த முதல் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான வார்ம் அப் போட்டி மழையால் கைவிடப்பட்டது.
Cricket World Cup 2023: ஐசிசி ஆண்கள் உலகக் கோப்பை 2023க்கான 10 அணி வீரர்கள்!
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டியில், நியூசிலாந்து அபாரமாக வெற்றி பெற்றது. இந்த நிலையில் தான் இன்றைய 4 ஆவது போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளும், 5ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளும் மோதுகின்றன. கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரம் மைதானங்களில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டுகிறது.
ICC Mens Cricket World Cup 2023: உலகக் கோப்பைக்கு முன்னதாக காயமடைந்த டாப் 10 பிளேயர்ஸ்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து இரு அணிகளுமே வலுவான அணிகள். இங்கிலாந்து நடப்பு சாம்பியன் என்றால், இந்தியா இந்த உலகக் கோப்பை தொடரை நடத்தும் அணி. இரு அணிகளுமே ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றிய நிலையில், உலகக் கோப்பைக்குள் எண்ட்ரி கொடுக்கின்றன.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்தியா 2-1 என்று கைப்பற்றியது. இதே போன்று நியூசிலாந்திற்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து 3-1 என்று கைப்பற்றியது. இந்த நிலையில் தான் கவுகாத்தி மைதானத்தில் இன்று நடக்கும் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான வார்ம் அப் போட்டியானது மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்த வார்ம் அப் போட்டியானது, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதோடு, டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
No Beef: மாட்டிறைச்சிக்கு தடை: சிக்கன், மட்டன், மீன், வீரர்கள் விரும்பும் உணவுகளுக்கு அனுமதி!