90மீ தூரத்திற்கு 8 ரன்களும், 100 மீட்டர் தூரம் சிக்ஸ் அடித்தால் 10 ரன்களும் கொடுக்கணும் – ரோகித் சர்மா!

By Rsiva kumar  |  First Published Sep 30, 2023, 10:02 AM IST

சிக்ஸர்கள் அடிக்கும் தூரத்தை வைத்து அதிக ரன்கள் கொடுக்க வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஐசிசிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.


ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் வரும் 5 ஆம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இதற்கான 10 அணிகளும் இந்தியா வந்து உலகக் கோப்பை வார்ம் அப் போட்டிகளில் விளையாடி வருகின்றன. நேற்று தொடங்கிய World Cup Warm Up Match வரும் 3 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மிக பிரம்மாண்டமாக தொடங்குகிறது.

CWC, NZ vs PAK: பாகிஸ்தானை பந்தாடிய நியூசிலாந்து – வார்ம் அப் போட்டியில் ருத்ரதாண்டம் ஆடிய நியூ., வீரர்கள்!

Tap to resize

Latest Videos

நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி 5ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வரும் 8 ஆம் தேதி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது.

இந்த நிலையில் தான் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான வார்ம் அப் போட்டி நடக்கிறது. பிற்பகல் 2 மணிக்கு கவுகாத்தி மைதானத்தில் இந்தப் போட்டி நடக்கிறது. இந்த நிலையில், யூடியூப் சேனல் ஒன்றில் பேசியது தற்போது வைரலாகி வருகிறது.

No Beef: மாட்டிறைச்சிக்கு தடை: சிக்கன், மட்டன், மீன், வீரர்கள் விரும்பும் உணவுகளுக்கு அனுமதி!

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 264 ரன்கள் குவித்து சாதனை படைத்தவர் ரோகித் சர்மா. இதுவரையில் இவரது சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை. எனினும் இன்னும் சாதனை படைத்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா 6 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். இதன் முலமாக ஒரு நாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் 551 அடித்த வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.

ODI World Cup Schedule: : ஐசிசி நடத்தும் அடுத்தடுத்த உலகக் கோப்பைகள் எங்கு, எப்போது நடக்கிறது?

இந்த நிலையில், தான் ரோகித் சர்மா சிக்ஸர்கள் குறித்து யூடியூப் ஒன்றில் பேசியிருக்கிறார். அதில், 90 மீட்டர் தூரத்திற்கு சிக்ஸ் அடித்தால், அதற்கு 8 ரன்கள் கொடுக்க வேண்டும். இதே போன்று, 100 மீட்டர் தூரத்திற்கு சிக்ஸர் அடித்தால் 10 ரன்கள் கொடுக்க வேண்டும். இப்படி அதிக தூரத்திற்கு சிக்ஸர்கள் விளாசும் போது அதற்குரிய பலனை கண்டிப்பாக சிக்ஸர் விளாசும் பேட்ஸ்மேன்களுக்கு வழங்க வேண்டும்.

IND vs ENG Warm Up Match:38 மணி நேரமாக எகானமி கிளாஸில் பயணித்த இங்கிலாந்து வீரர்கள்: ஜானி பேர்ஸ்டோவ் விமர்சனம்!

இப்போது நடைமுறையில் இருக்கும் விதி என்றால், எல்லைக்கோட்டை தாண்டினால் சிக்ஸர். அதற்கு 6 ரன்கள். அவ்வளவு. ஆனால், எல்லைக்கோட்டையும் தாண்டி, ரசிகர்கள் கூட்டத்திற்குள்ளும், மைதான மேற்கூரை வரையிலும், ஒரு சில நேரங்களில் ஸ்டேடியத்திற்கு வெளியிலும் சில வீரர்கள் சிக்ஸர்கள் அடிக்கிறார்கள். இது எல்லாவற்றிற்கும் வெறும் 6 ரன்கள் மட்டுமே தான் கொடுக்கிறார்கள். உண்மையில், ஒரு பேட்ஸ்மேன் சிக்ஸர் அடிக்கும் தூரத்தை வைத்து ரன்கள் வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

click me!