
ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை பறக்கவிட்டது எப்படி என டெல்லி அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.
டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில், 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி திரில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியின் இளம் வீரர்களான பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் அதிரடியான பேட்டிங்கால், 17.1 ஓவருக்கு 196 ரன்களை குவித்தது டெல்லி அணி.
ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி 7 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களுடன் 29 பந்துகளுக்கு 69 ரன்கள் குவித்து அசத்தினார். ராஜஸ்தான் அணியின் பந்துவிச்சை பண்ட் பறக்கவிட்டார்.
ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட ரிஷப் பண்ட் பேசும்போது, அதிரடியாக ஆடியது குறித்து தெரிவித்தார். அப்போது, டெல்லி அணியால் தக்கவைக்கப்பட்டதால் கூடுதல் பொறுப்பு இருப்பதாக நினைக்கவில்லை. நான் எப்படி அடித்தேன் என்பதை அணி வெற்றி பெறுவதே முக்கியம். சில வித்தியாசமான உத்திகளை கையாண்டு பேட்டிங் செய்தேன் என ரிஷப் பண்ட் தெரிவித்தார்.
எந்தவிதமான உத்திகள் என்பது குறித்து பண்ட் தெரிவிக்கவில்லை. எந்த மாதிரியான உத்தியோ, ஆனால் பண்ட்டின் பேட்டிங் அபாரமாக இருந்தது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.