கம்பீர் சொன்ன 'அந்த' வார்த்தை; அடுத்த நொடியே ஓய்வு முடிவெடுத்த அஸ்வின்; வெளியான புது தகவல்!

By Rayar r  |  First Published Dec 19, 2024, 3:22 PM IST

ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவரது ஓய்வுக்கு பின்னால் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இருந்தது தெரியவந்துள்ளது.
 


அஸ்வின் ஓய்வு 

இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தியா ஆஸ்திரேலியா தொடரின் பாதியிலேயே அவர் ஓய்வு முடிவை அறிவித்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 2 போட்டிகளில் வெளியே உட்கார வைப்பட்டதே காரணம் என சொல்லப்படுகிறது.

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில், அஸ்வினின் ஓய்வுக்கு பின்னால் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முக்கிய பங்கு வகித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நியூசிலாந்து டெஸ்ட் தொடர் நடந்து கொண்டிருந்தபோது, ஆஸ்திரேலியா தொடருக்குக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் உள்ளூரில் இந்திய அணி 3 0 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்த நிலையில், அந்த தொடரில் அஸ்வினின் பவுலிங்கும், பேட்டிங்கும் எதிர்பார்த்த அளவு இல்லை. 

பிளேயிங் வெவனில் இடம்பெறுவது கடினம் 

இந்த தோல்வியால் பயிற்சியாளர் கவுதம் கம்பீரும், கேப்டன் ரோகித் சர்மாவும் பிசிசிஐயால் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். ஆஸ்திரேலிய தொடரை வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அஸ்வினிடம் பேசிய கம்பீர், 'நீங்கள் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இடம்பெற்றாலும், பிளேயிங் லெவனில் இடம் பெறுவதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது' என்று கூறியதாக கூறப்படுகிறது. 

இதனால் அஸ்வின் அஸ்வின் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார். கம்பீர் சொன்ன அடுத்த நொடியே அவரது மனதில் ஓய்வு எண்ணம் உதிக்க ஆரம்பித்து விட்டது. தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அஸ்வினை வெளியே உட்கார வைத்து வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இனிமேல் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று கருதிய அஸ்வின் ஓய்வு எடுக்க இதுதான் சரியான நேரம் என்று எண்ணியுள்ளார்.

வாஷிங்டன் சுந்தர்

முதல் டெஸ்ட் முடியும் தறுவாயில் ரோகித் சர்மா ஆஸ்திரேலியா சென்றபோது, ஓய்வு முடிவு குறித்து அஸ்வின் அவரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் ரோகித் சர்மா பிங்க் பால் டெஸ்ட் வரை விளையாடும்படி கூறியுள்ளார். இதன்பிறகு 2வது டெஸ்ட்டில் பிளேயிங் லெவனில் இடம்பிடித்த அஸ்வின், 3வது டெஸ்ட்டில் கழற்றி விடப்பட்டார். அடுத்த 2 டெஸ்ட்டிலும் பிளேயிங் வெவனில் வாய்ப்பு கிடைக்காத என்று எண்ணிய அஸ்வின் அதிரடியாக ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அஸ்வினை போன்று ஆப் ஸ்பின்னராகவும், அஸ்வினை விட நன்றாக பேட் செய்பவராகவும் உள்ளதால் கம்பீருக்கும், ரோகித் சர்மாவுக்கும் அவரை பிடித்துப் போய் விட்டது. மேலும் நியூசிலாந்து தொடரில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் கலக்கியதால், அப்போதே அஸ்வினுக்கு பதிலாக சுந்தர் இறங்க வேண்டும் என கம்பீர் முடிவெடுத்து விட்டதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

click me!