சாம்பியன்ஸ் டிராபி: முழு அட்டவணை! போட்டிகள் தொடங்கும் நேரம்? எந்த டிவியில் பார்க்கலாம்?

Published : Feb 11, 2025, 09:03 AM ISTUpdated : Feb 11, 2025, 09:04 AM IST
சாம்பியன்ஸ் டிராபி: முழு அட்டவணை! போட்டிகள் தொடங்கும் நேரம்? எந்த டிவியில் பார்க்கலாம்?

சுருக்கம்

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19ம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், முழு அட்டவணை, போட்டிகள் தொடங்கும் நேரம் என்ன? எந்த டிவியில் பார்க்கலாம்? என்பது குறித்து பார்ப்போம்.

சாம்பியன்ஸ் டிராபி தொடர்

'மினி உலகக்கோப்பை' எனப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி மாதம் 19ம் தேதி முதல் மார்ச் மாதம் 9ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இந்த தொடரை பாகிஸ்தான் நடத்தும் நிலையில் இந்தியா அங்கு செல்ல மறுத்து விட்டதால் இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறும். 

இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 8 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் ஏ பிரிவில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்தியா-பாகிஸ்தான் போட்டி 

இந்த தொடர் தொடங்கும் பிப்ரவரி 19ம் தேதி நியூசிலாந்தும், பாகிஸ்தானும் மோதுகின்றன. உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி பிப்ரவரி 23ம் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டி தொடருக்கான அனைத்து அணிகளும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டன. 

சாம்பியன்ஸ் டிராபி முழு அட்டவணை இதோ:-

பிப்ரவரி 19: போட்டி 1: பாகிஸ்தான் vs நியூசிலாந்து (கராச்சி)

பிப்ரவரி 20: போட்டி 2: வங்கதேசம் vs இந்தியா (துபாய்)

பிப்ரவரி 21: போட்டி 3: ஆப்கானிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா (கராச்சி)

பிப்ரவரி 22: போட்டி 4: ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து (லாகூர்)

பிப்ரவரி 23: போட்டி 5: பாகிஸ்தான் vs இந்தியா (துபாய்)

பிப்ரவரி 24: போட்டி 6: வங்கதேசம் vs நியூசிலாந்து (ராவல்பிண்டி)

பிப்ரவரி 25: போட்டி 7: ஆஸ்திரேலியா vs தென்னாப்பிரிக்கா (ராவல்பிண்டி)

பிப்ரவரி 26: போட்டி 8: ஆப்கானிஸ்தான் vs இங்கிலாந்து (லாகூர்)

பிப்ரவரி 27: போட்டி 9: பாகிஸ்தான் vs வங்கதேசம் (ராவல்பிண்டி)

பிப்ரவரி 28: போட்டி 10: ஆப்கானிஸ்தான் vs ஆஸ்திரேலியா (லாகூர்)

மார்ச் 1: போட்டி 11: தென்னாப்பிரிக்கா vs இங்கிலாந்து (கராச்சி)

மார்ச் 2: போட்டி 12: நியூசிலாந்து vs இந்தியா (துபாய்)

மார்ச் 4: முதல் அரையிறுதி: A1 vs B2 (துபாய்)

மார்ச் 5: 2வது அரையிறுதி: B1 vs A2 (லாகூர்)

மார்ச் 9: இறுதிப்போட்டி 

சாம்பியன்ஸ் டிராபி 2025 இந்திய அணி அட்டவணை:

பிப்ரவரி 20:  வங்கதேசம் vs இந்தியா (துபாய்)

பிப்ரவரி 23: பாகிஸ்தான் vs இந்தியா (துபாய்)

மார்ச் 2: நியூசிலாந்து vs இந்தியா (துபாய்)

சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் எத்தனை மணிக்கு தொடங்கும்?

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு தொடங்கும். போட்டி தொடங்கும் அரை மணி நேரத்துக்கு முன்னதாக டாஸ் போடப்படும்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரை எந்த சேனலில் பார்க்கலாம்?

சாம்பியன்ஸ் டிராபி தொடர் முழுவதையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் பார்க்கலாம். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் கண்டு ரசிக்கலாம்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Ind Vs SA 1st T20: கில், பாண்டியா கம்பேக்.. புல் போர்சுடன் களம் இறங்கும் இந்திய அணி..!
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!