RCB vs CSK : ரணகளத்தில் ஒரு கிளுகிளுப்பு.! மேட்சுக்கு நடுவே காதலனிடம் காதலைக் கூறிய இளம் பெண்..

Published : May 05, 2022, 10:32 AM ISTUpdated : May 05, 2022, 10:50 AM IST
RCB vs CSK : ரணகளத்தில் ஒரு கிளுகிளுப்பு.! மேட்சுக்கு நடுவே காதலனிடம் காதலைக் கூறிய இளம் பெண்..

சுருக்கம்

RCB vs CSK: IPL2022  புனே நகரில்  ஐபிஎல் டி20 போட்டியின் லீக்ஆட்டத்தில் புள்ளிக்காக சிஎஸ்கே அணியும், ஆர்சிபி அணியும் கோதாவில் ஈடுபட்ட நேரத்தில் ரசிகர்கள் அமர்ந்திருந்த கேலரியில் அருமையான ரொமான்ஸ்காட்சி அரங்கேறியது.

புனே நகரில்  ஐபிஎல் டி20 போட்டியின் லீக்ஆட்டத்தில் புள்ளிக்காக சிஎஸ்கே அணியும், ஆர்சிபி அணியும் கோதாவில் ஈடுபட்ட நேரத்தில் ரசிகர்கள் அமர்ந்திருந்த கேலரியில் அருமையான ரொமான்ஸ்காட்சி அரங்கேறியது.

இளம் பெண் ஒருவர் தனது காதலை அழகாக, தனது காதலை வெளிப்படுத்திய காட்சி அனைவரையும் ஆஹா போடவைத்தது.

புனேயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆர்சிபி அணி. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி  20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்தது. 174 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்து 13 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி 12 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு முன்னேறியது. சிஎஸ்கே அணி 10 போட்டிகளில் 6 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கேயின் நிலைமையைப் பார்த்தால் இந்த ஆண்டு சீசனில், ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்வது கூட கடினம்தான். முன்னாள் சாம்பியன்கள் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணியினர் இந்த ஆண்டு லீக் சுற்றோடு வெளியேற வேண்டியதிருக்கும்.

ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல். பேட்டிங்கில் சொதப்பினாலும் பந்துவீச்சில் இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு துணையாகினார். குறிப்பாக அம்பதி ராயுடு, உத்தப்பா ஆகிய இரு பெரிய விக்கெட்டுகள மேக்ஸ்வெல் சாய்த்தார். தவிர ஹர்சல் படேல் அருமையாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றியை உறுதி செய்தார். ஜடேஜா, மொயின்அலி, பிரிட்டோரியஸ் ஆகிய பேட்ஸ்மேன்களை படேல் வெளியேற்றி வெரறறியை உறுதி செய்தார்.

சேஸிங்கில் சிஎஸ்கே அணி வெல்லுமா, ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் சுருட்டுவார்களா என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் கேலரியில் பரபரப்புடன்போட்டியை பார்த்தனர். வெயில் கொடுமையின் தாக்கமும் கேலரியில் இருந்த நேரத்தில் ரசிகர்களை குளிர்விக்கும் வகையில், ஆஹா போடவைக்கும் வகையில் ஒரு காட்சி கேலரியில் நடந்தது.

 

ஆர்சிபி ஜெர்ஸி அணிந்திருந்த ஒரு இளைஞரிடம் சென்று ஒரு  இளம் பெண், ஒரு அழகிய பரிசை அளித்து தனது காதலை வெளிப்படுத்தினார். அந்த இளம் பெண் முழங்காலிட்டு, தனது கையில் இருந்த மோதிரத்தை அந்த இளைஞரிடம் கொடுத்து என்னைத் திருமணம்செய்கிறாரா எனக் கேட்டார். இந்த இளம் பெண்ணின் காதல் விண்ணப்பத்தைப் பார்த்த அந்த இளைஞர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி, முகம் முழுவதும் புன்னகையால் நிரம்பியது. அதன்பின் அந்த இளம் பெண் தனது காதலனின் விரலில் இந்த மோதிரத்தை அணிவித்து காதலைத் தெரிவித்தார். 

இதைப் பார்த்த ரசிகர்கள் சில நிமிடங்கள் போட்டியை மறந்துவிட்டு கைதட்டி ஆரவாரம் செய்தனர். ஒருபக்கம் புள்ளிக்காக ஆர்சிபியும், சிஎஸ்கேயும் கோதாவில் இருந்தபோது இதுபோன்ற ரொமான்ஸ் காட்சி, ரசிகர்களை பரபரப்பிலிருந்து மீட்டது

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!