எச்சரிக்கை மணி தேவைதான்.. அதெல்லாம் சாதாரண விஷயம் கிடையாது!! தம்பி செமயா வருவாரு.. சாஸ்திரி சரவெடி

By karthikeyan VFirst Published Nov 2, 2018, 12:51 PM IST
Highlights

தோல்விகள் தான் அணியின் சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டுவர உதவும் என்பதால் சில தோல்விகள் தேவைதான் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
 

தோல்விகள் தான் அணியின் சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டுவர உதவும் என்பதால் சில தோல்விகள் தேவைதான் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 3-1 என வென்றது. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, மூன்றாவது போட்டியில் தோல்வியடைந்தது. இரண்டாவது போட்டி டிராவில் முடிந்தது. கடைசி இரண்டு போட்டிகளில் அபார வெற்றிகளை பெற்று தொடரை கைப்பற்றியது இந்திய அணி. 

தொடரை வென்றதற்கு அப்பாற்பட்டு, இந்த தொடரில் பல சாதனைகளை இந்திய அணி நிகழ்த்தியுள்ளது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியும் பல சாதனைகளை செய்துள்ளனர். மேலும் இந்த தொடரில் இந்திய அணியின் நான்காம் வரிசை பேட்ஸ்மேனுக்காக பிரச்னைக்கு ராயுடுவின் மூலம் தீர்வு கிடைத்துள்ளது. கலீல் அகமது என்ற இளம் இடது கை வேகப்பந்துவீச்சாளர் நம்பிக்கை அளித்துள்ளார். 

இந்நிலையில், தொடரை வென்றபிறகு பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் இந்திய அணி அதன் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அந்த போட்டிகளில் இன்னும் சிறப்பாக ஆடியிருக்க வேண்டும். ஆனால் அதுபோன்ற தோல்விகள்தான் ஒரு அணியாக மீண்டெழ உதவும். கடைசி இரண்டு போட்டிகளில் நாம் சிறப்பாக ஆடினோம். ராயுடுவின் ஆட்டம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அணியில் வாய்ப்பு கிடைக்கும் ஒரு வீரர் சிறப்பாக ஆடி தன்னை நிரூபிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. இரண்டு போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்றாலே அவருக்கான இடம் பறிபோய்விடும். ஆனால் அதுபோன்ற அழுத்தங்களை எல்லாம் சிறப்பாக கையாண்டு அருமையாக ஆடினார் ராயுடு. இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது அனுபவமில்லாத இளம் வீரராக இருந்தாலும் பந்துவீச்சில் வேரியேஷன் இருக்கிறது. ஆக்ரோஷமாகவும் இருக்கிறார் என சாஸ்திரி தெரிவித்தார். 
 

click me!