ரோஹித்தை தெறிக்கவிட்ட தோனி.. இப்போ தெரியுதா ”தல” யாருனு..? செம வீடியோ

Published : Nov 02, 2018, 12:14 PM IST
ரோஹித்தை தெறிக்கவிட்ட தோனி.. இப்போ தெரியுதா ”தல” யாருனு..? செம வீடியோ

சுருக்கம்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடர் வெற்றி கொண்டாட்டத்தின்போது ரோஹித்தை தோனி பயமுறுத்திய வீடியோ வைரலாகிவருகிறது.   

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடர் வெற்றி கொண்டாட்டத்தின்போது ரோஹித்தை தோனி பயமுறுத்திய வீடியோ வைரலாகிவருகிறது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 3-1 என வென்றது. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, மூன்றாவது போட்டியில் தோல்வியடைந்தது. இரண்டாவது போட்டி டிராவில் முடிந்தது. கடைசி இரண்டு போட்டிகளில் அபார வெற்றிகளை பெற்று தொடரை கைப்பற்றியது இந்திய அணி. 

தொடரை வென்றதற்கு அப்பாற்பட்டு, இந்த தொடரில் பல சாதனைகளை இந்திய அணி நிகழ்த்தியுள்ளது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியும் பல சாதனைகளை செய்துள்ளனர். மேலும் இந்த தொடரில் இந்திய அணியின் நான்காம் வரிசை பேட்ஸ்மேனுக்காக பிரச்னைக்கு ராயுடுவின் மூலம் தீர்வு கிடைத்துள்ளது. கலீல் அகமது என்ற இளம் இடது கை வேகப்பந்துவீச்சாளர் நம்பிக்கை அளித்துள்ளார். 

இவ்வாறு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடர் அனைத்து வகையிலும் இந்திய அணிக்கு சிறப்பாக அமைந்துள்ளது. தொடரை வென்றுவிட்டு ஹோட்டலுக்கு திரும்பிய இந்திய அணிக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. கேப்டன் கோலி பூங்கொத்து கொடுத்து வரவேற்கப்பட்டார். மேலும் வெற்றியை கொண்டாடும் விதமாக வீரர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். 

கேக்கை துணை கேப்டன் ரோஹித் சர்மா வெட்டினார். அப்போது, ரோஹித்துக்கு பின் நின்ற தோனி, ரோஹித்தை பயமுறுத்துவதற்காக பலூனை அவரது காதுக்கு அருகே கொண்டு சென்று உடைக்குமாறு ஜடேஜாவிடம் சொன்னார். உடனே ஜடேஜா, ரோஹித்தின் காதுக்கு அருகே பலூனை உடைக்க, ரோஹித் பயந்ததால் திடுக்கென தூக்கி போட்டது. இதைக்கண்டு வீரர்கள் அனைவரும் சிரித்தனர். இந்த சம்பவத்தின் வீடியோவை பிசிசிஐ டுவிட்டரில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ T20: பேட்டிங் ஸ்டைலை மாற்றுகிறாரா சூர்யகுமார்?.. அவரே சொன்ன அதிரடி பதில்!
IND VS NZ முதல் டி20.. ஷ்ரேயாஸ் ஐயர் இடத்துக்கு 'ஆப்பு' வைத்த இளம் வீரர்.. பிளேயிங் லெவன்!