இங்கிலாந்து டெஸ்ட் தொடரை தோற்றதற்கு சாஸ்திரி சொன்ன காரணம்!! எப்படித்தான் சாஸ்திரியால் இப்படிலாம் பேச முடியுதோ தெரியல

By karthikeyan VFirst Published Oct 1, 2018, 3:36 PM IST
Highlights

இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இழந்ததற்கு டாஸ் தோற்றதும் முக்கிய காரணம் என்று பிசிசிஐ நிர்வாகக்குழுவிடம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ரவி சாஸ்திரியின் இந்த விளக்கம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
 

இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இழந்ததற்கு டாஸ் தோற்றதும் முக்கிய காரணம் என்று பிசிசிஐ நிர்வாகக்குழுவிடம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ரவி சாஸ்திரியின் இந்த விளக்கம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 4-1 என இழந்தது. இந்த தோல்வியின் எதிரொலியாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் விராட் கோலி ஆகியோர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ரவி சாஸ்திரியை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு ராகுல் டிராவிட் அல்லது அனில் கும்ப்ளே ஆகிய இருவரில் ஒருவரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்தன. 

இங்கிலாந்து தொடரில் காயமடைந்த வீரர்களை காயத்துடன் ஆடவைத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து இந்திய அணி நிர்வாகத்திடமிருந்து பிசிசிஐ நிர்வாகக்குழு அறிக்கை கேட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் தோல்வி குறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் விளக்கம் கோரியிருந்தது. 

இந்நிலையில், ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக வினோத் ராய் தலைமையிலான பிசிசிஐ நிர்வாகக்குழுவிடம் விளக்கமளித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அப்போது, இந்திய அணி ஒருமுறை கூட டாஸ் வெல்லாததும் இந்திய அணி தொடரை இழந்ததற்கு காரணம் எனவும் இந்திய அணியின் ஆட்டம் திருப்திகரமானதாக இருந்ததாகவும் விளக்கமளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததற்கு டாஸ் தோற்றதை ரவி சாஸ்திரி முக்கியமான காரணமாக குறிப்பிட்டிருப்பது ரசிகர்களுக்கு சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் ஒரு காரணம் என்றாலும் அதைப்போய் முக்கியமான காரணமாக குறிப்பிட்டுள்ளார் ரவி சாஸ்திரி. 

மேலும் அந்த ஆலோசனையின்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்தும் அதில் வெற்றி பெறுவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இந்திய அணிக்கு சுழற்பந்து பயிற்சியாளர் ஒருவர் நியமிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. 
 

click me!