RR vs KKR : அடங்காதவன் டா... விக்கெட் எடுத்ததும் புஷ்பாவாக மாறி கெத்து காட்டிய ராஜஸ்தான் வீரர் - வைரல் வீடியோ

Published : Apr 19, 2022, 11:00 AM IST
RR vs KKR : அடங்காதவன் டா... விக்கெட் எடுத்ததும் புஷ்பாவாக மாறி கெத்து காட்டிய ராஜஸ்தான் வீரர் - வைரல் வீடியோ

சுருக்கம்

RR vs KKR : ஷெல்டன் ஜாக்சன் விக்கெட்டை வீழ்த்தியதும் புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் போடும் ஸ்டெப்பை மைதானத்தில் போட்டு அசத்தினார் ஓபிடு மெக்காய். 

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 30-வது போட்டி நேற்று மும்பையில் உள்ள பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் ஷ்ரேயாஸ் ஐய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதல் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி, கொல்கத்தா அணி பந்துவீச்சை பதம் பார்த்தது. குறிப்பாக சிக்சர், பவுண்டரிகளாக விளாசித்தள்ளிய ஜாஸ் பட்லர் சதமடித்து அசத்தினார். பட்லரின் அதிரடி சதத்தால் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 217 ரன்களை குவித்தது.

இதையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, வேகமாக ரன்குவிக்கத் தொடங்கியது. கேப்டன் ஷ்ரேயாஸ் ஐய்யர் 85 ரன்கள் குவித்து அசத்தியபோதும் அந்த அணி சஹால் வீசிய 17-வது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்தது பெரும் பின்னடைவாக அமைந்தது. இதையடுத்து 18-வது ஓவரில் உமேஷ் யாதவ் அதிரடியாக ஆடி 20 ரன்களை குவித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். 

இறுதி ஓவரில் கொல்கத்தா அணி வெற்றி பெற 11 ரன்கள் தேவைப்பட்டது. அந்த சமயத்தில் மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த ஓபிடு மெக்காய் பந்துவீச வந்தார். அந்த ஓவரில் ஷெல்டன் ஜாக்சன் மற்றும் உமேஷ் யாதவ்வை அவுட் ஆக்கி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார் ஓபிடு மெக்காய். குறிப்பாக ஷெல்டன் ஜாக்சன் விக்கெட்டை வீழ்த்தியதும் அவர் கொண்டாடிய விதம் தான் தற்போது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.

அந்த விக்கெட்டை வீழ்த்தியதும் புஷ்பா படத்தில் ‘அடங்காதவன் டா' என்கிற டயலாக்கை பேசி நடிகர் அல்லு அர்ஜுன் போடும் ஸ்டெப்பை மைதானத்தில் போட்டு அசத்தினார் ஓபிடு மெக்காய். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இதையும் படியுங்கள்... Thalapathy 66 :சரத்குமாரை தொடர்ந்து ‘தளபதி 66’ படத்தில் இணையும் 80ஸ் நாயகன்... விஜய்க்கு அண்ணனாக நடிக்கிறாராம்

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA 1st T20: ஹர்சித் ராணா நீக்கம்.. தமிழக வீரருக்கும் இடமில்லை.. இந்திய அணி பிளேயிங் லெவன்!
இந்தியாவுக்காக மீண்டும் களம் இறங்கும் ரோ-கோ எப்போது தெரியுமா? கோலி, ரோஹித்தின் அடுத்த ஒருநாள் போட்டி