
"மிக கடுமையான சோகங்களுடன், எங்களின் மகன் உயிரிழந்து விட்டான் என்பதை அறிவிக்கிறோம்," என முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அவரின் மனைவி ஜார்ஜியானா ரோட்ரிக்ஸ் சமூக வலைதள பதிவு மூலம் கூட்டாக அறிவித்து இருக்கின்றனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க இருப்பதாக கிறிஸ்டியானோ ரொனால்டோ சமூக வலைதள பதிவின் மூலம் தெரிவித்து இருந்தார். இரட்டை குழந்தைகளை எதிர்பார்த்து காத்திருந்த ரொனால்டோ தம்பதிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், பிறந்த இரு குழந்தைகளில் ஆண் குழந்தை உயிரிழந்து விட்டது. மகன் உயிரிழந்த தகவலை கிறிஸ்டியானோ ரொனால்டோ தம்பதி சமூக வலைதள பதிவில் தெரிவித்து இருக்கின்றனர்.
வலைதள பதிவு:
தனக்கு புதிதாக பிறந்த மகன் உயிரிழந்ததாக கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது டுவிட்டர் அக்கவுண்டில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “எங்களுடைய அன்பு மகன் இறந்துவிட்டான் என்பதை கனத்த இதயத்துடன் பதிவு செய்கிறோம். பெற்றோரால் ஏற்றுக் கொள்ள முடியாத வேதனை இது தான். எங்களது மகனை காப்பாற்ற போராடிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி. எங்களுடைய பெண் குழந்தை பிறப்பு எங்களுக்கு தற்போது ஆறுதலாக உள்ளது. இந்த இழப்பு எங்களை மிகுந்த வேதனையில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த கொடுமையான காலக்கட்டத்தில் தனிமையை எதிர்பார்க்கிறோம். எங்களின் செல்ல மகன். நீ எப்போதும் எங்களின் ஏஞ்சல். நாங்கள் எப்போதும் உன்னை விரும்புவோம்,” என கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் ஜார்ஜியானா ரோட்ரிக்ஸ் பதிவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ மகன் உயிரிழப்புக்கு கால்பந்து ரசிகர்கள் பலரும் தங்களின் சோகத்தை சமூக வலைதள பதிவுகளில் வெளிப்படுத்தி வருகின்றனர். பலரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ தம்பதிக்கு ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர். இதோடு முன்னணி கால்பந்து கிளப்களும் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு தங்களின் வருத்தங்களை தெரிவித்து வருகின்றன.
குடும்பம்:
கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் ரோட்ரிக்ஸ் தம்பதியினருக்கு கிரிஸ்டியானோ ரொனால்டோ ஜூனியர், அலானா மார்டினா டோஸ் சாண்டோஸ் அவெரியோ, இவா மரியா டோஸ் சாண்டோஸ் மற்றும் மடியோ ரொனால்டோ என நான்கு குழந்தைகள் உள்ளனர். இதை அடுத்து ரொனால்டோ மற்றும் ரோட்ரிக்ஸ் தம்பதி இரட்டை குழந்தைகளை எதிர்பார்த்து வந்தனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.