IPL RR vs KKR : அன்று விளையாடாமல் வைரலாச்சு;இன்று விளையாடி வைரலாக்கினேன்: கொல்க்ததா அணி ஹீரோ சஹல் மனம் திறப்பு

By Pothy RajFirst Published Apr 19, 2022, 10:33 AM IST
Highlights

ipl rr vs kkr : 2019ஆண்டு உலகக் கோப்பையிலிருந்து நான் ஏதாவது ஒரு படத்தை வைரலாக்க விரும்பினேன், அன்று விளையாடாமல் வைரலாகிய எனதுபுகைப்படும், இன்று விளையாடி வைரலானது என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்தி பந்துவீச்சாளர் யஜுவேந்திர சஹல் தெரிவித்துள்ளார்.

2019ஆண்டு உலகக் கோப்பையிலிருந்து நான் ஏதாவது ஒரு படத்தை வைரலாக்க விரும்பினேன், அன்று விளையாடாமல் வைரலாகிய எனதுபுகைப்படும், இன்று விளையாடி வைரலானது என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்தி பந்துவீச்சாளர் யஜுவேந்திர சஹல் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் சேர்த்தது. 216 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.4 ஓவர்களில் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இ்ந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் வீரர் யஜூவேந்திர சாஹல் ஹாட்ரிக் விக்கெட் சாதனை நிகழ்த்தினார், இந்த ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டையும் முதன்முதலில் சஹல் நிகழ்த்தினார். யஜுவந்திர சஹல் வீசிய 17-வது ஓவரில் மட்டும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார். முதல் பந்தில் வெங்கடேஷ் ஐயர்(6), 4-வது பந்தில் ஸ்ரேயாஸ்(85), 5-வது பந்தில் ஷிவம் மாவி(0), கம்மின்ஸ்(0) என வரிசையாக வீழ்ந்தனர்.

ஸ்ரேயாஸ் அய்யர் விக்கெட்டை சஹல் வீழ்த்தியதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாகும். நன்கு செட்டில்ஆகி விளையாடி வந்த ஸ்ரேயாஸ் அய்யர் நின்றிருந்தால், நிச்சயம் கொல்கத்தா அணி வென்றிருக்க வாய்ப்பு இருந்தது. ஆனால், சஹலின் கூக்ளி பந்துவீச்சால் ஸ்ரேயாஸ் அய்யர் விக்கெட்டை இழந்ததுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறி தோல்விக்கு வித்திட்டது.

Chahal. Simply Outstanding . Ball hi nahi Rajasthan ki kismat bhi spin kar di. pic.twitter.com/ZrChdoMKaS

— Virender Sehwag (@virendersehwag)

அதுமட்டுமல்லாமல் சஹல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியபின் மைதானத்தை வலம் வந்து, பவுண்டரி லைன் அருகே படுத்துக்கொண்டு ஒரு காலை மட்டும் சாய்த்தவாறு புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார். இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது. 

ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியபின் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தது குரித்து யஜுவேந்திர சஹல் அளித்த பேட்டியில் கூறியதாவது: 

கடந்த 2019ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின் போது, நான் பவுண்டரி லைன் அருகே கூலிங்கிளாஸ் போட்டுக்கொண்டு சாதாரணமாக கால்மீது கால்போட்டு சாய்ந்து அமர்ந்திருந்த எனது புகைப்படம் வைரலானது. அந்தப் போட்டியில் நான் விளையாடவில்லை.

அதேபோன்ற புகைப்படத்தை நான் களத்தில் விளையாடி வைரலாக்க முயன்றேன். அதிலும் எப்போது நான் 5 விக்கெட் வீழ்த்துகிறேனோ அப்போது அதேபோன்று போஸ் கொடுத்து அந்தப் புகைப்படத்தை வைரலாக்க விரும்பினேன். இப்போது 5 விக்கெட் வீழ்த்திவிட்டதால் அதேபோன்று பவுண்டரி அருகே படுத்துக்கொண்டு புகைப்படம் எடுத்தேன். 

கம்மின்ஸுக்கு கூக்ளி மூலம் பந்துவீசினால் நிச்சயம் பலன் கிடைக்கும் என நம்பினேன். அந்த நேரத்தில் வழக்கமான லெக்ஸ்பின் வீசுவதற்கு பதிலாக கூக்ளி முறையியில் பந்துவீச கம்மின்ஸ் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். வெங்கடேஷ், நிதிஷ் ராணாவும் கூக்ளியில்தான் ஆட்டமிழந்தார்கள். நான் வீசிய கூக்ளி நல்ல முறையில் இருந்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தாலும் அந்த ஓவரில் டாட்பந்துகள் இருந்து மெய்டனாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார்


 

click me!