CWG 2026: பளுதூக்குதலில் வெள்ளியை தட்டித்தூக்கிய தமிழக வீரர்.. யார் இந்த ராஜா முத்துப்பாண்டி?

Published : Jul 27, 2026, 09:53 AM IST
Raja Muthupandi

சுருக்கம்

CWG 2026: Raja Muthupandi: 2026 காமன்வெல்த் விளையாட்டு தொடரில் பளுதூக்குதல் போட்டியில் தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார். யார் இவர்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நமது நாட்டின் பதக்க வேட்டை சிறப்பாகத் தொடர்ந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான 65 கிலோ பிரிவு பளுதூக்குதல் போட்டியில், இந்திய வீரர் தமிழகத்தை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இது ஒரே நாளில் இந்தியாவிற்குப் கிடைத்த மூன்றாவது பதக்கமாகும்.

வெள்ளிப்பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டி

ESPN தகவலின்படி, 26 வயதான ராஜா, ஸ்நாட்ச் பிரிவில் 126 கிலோவும், க்ளீன் & ஜெர்க் பிரிவில் 160 கிலோவும் தூக்கி, ஒட்டுமொத்தமாக 286 கிலோ எடையுடன் இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார். இப்போட்டியில், மலேசிய வீரர் அஸ்னில் பின் பிடின் முஹமத் தங்கப் பதக்கம் வென்றார். அவர் மொத்தமாக 299 கிலோ எடை தூக்கி, காமன்வெல்த் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் 2018 கோல்டு கோஸ்ட் மற்றும் 2022 பர்மிங்காம் ஆகிய போட்டிகளிலும் அவரே தங்கப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது அவருக்குத் தொடர்ச்சியாகக் கிடைக்கும் மூன்றாவது காமன்வெல்த் தங்கப் பதக்கமாகும்.

இதையும் படிங்க: வைபவ் சூர்யவன்ஷிக்கு சீனியர் வீரர்கள் வார்னிங்.. இந்திய அணி டிரெஸ்ஸிங் ரூமில் நடந்தது என்ன?

யார் இந்த ராஜா முத்துப்பாண்டி?

ராஜா தனது இரண்டாவது முயற்சியில் ஸ்நாட்ச் பிரிவில் 126 கிலோ எடையைத் தூக்கினார். அதேபோல, க்ளீன் & ஜெர்க் பிரிவிலும் தனது இரண்டாவது முயற்சியில் 160 கிலோ எடையைத் தூக்கி, மொத்தமாக 286 கிலோவுடன் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார். தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி, தனது சிறுவயது முதலே பளுதூக்குதலில் தீவிர ஆர்வம் காட்டி வந்தார். ஜூனியர் அளவிலான போட்டிகளில் பங்கேற்றுத் தன் திறமையை நிரூபித்த இவருக்கு, 2018-ஆம் ஆண்டு காமன்வெல்த் ஜூனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

காயத்தில் மீண்டெழுந்து சாதித்தார்

இந்த வெற்றி ராஜாவுக்கு ஒரு மிகப்பெரிய மறுவருகையாக (Comeback) அமைந்துள்ளது. 2019-ஆம் ஆண்டு முழங்கையில் ஏற்பட்ட தசைநார் காயம் காரணமாக அவரது விளையாட்டு வாழ்க்கையே கேள்விக்குறியானது. அதன்பின்னர், கொரோனா ஊரடங்கு காரணமாக அவரது பயிற்சியும் பாதிக்கப்பட்டது. இதற்கிடையில், அவர் 65 கிலோ எடைப் பிரிவிற்கு மாறியபோது, ஜெர்மி லால்ரின்னுங்கா அப்பிரிவில் முன்னிலை பெற்றதால், ராஜாவுக்கு 2022 பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது.

ஆயினும், மனம் தளராமல், 65 கிலோ எடைப்பிரிவு அறிமுகமான பிறகு அவர் தேசிய அணிக்கு மீண்டும் திரும்பினார். 2025 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 9-ஆம் இடம் பிடித்து, தனது தனிப்பட்ட சிறந்த அளவான 299 கிலோவைப் பதிவு செய்து நம்பிக்கையளித்தார்.

முன்னதாக, ஒலிம்பிக் வெள்ளிப் பதக்க வீராங்கனை மீராபாய் சானு, பெண்களுக்கான 48 கிலோ பிரிவில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகத் தங்கப் பதக்கம் வென்றார். அதேபோல, ஆண்களுக்கான 60 கிலோ பிரிவில் சானம்பம் ரிஷிகாந்தா சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். ராஜாவின் வெற்றியையும் சேர்த்து, ஒரே நாளில் பளுதூக்குதலில் மட்டும் இந்தியாவிற்கு மூன்று பதக்கங்கள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 15 வயதிலேயே மாஸ் சம்பவம்! சர்வதேச கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

வெற்றியை பெற்றோர், பயிற்சியாளருக்கு சமர்ப்பித்தார்

போட்டிக்குப் பிறகு ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய ராஜா, "நிச்சயமாக எனக்கு ஏமாற்றம்தான். ஏனென்றால், தங்கம் வெல்ல முழு முயற்சியையும் கொடுப்போம் என்று என் பயிற்சியாளர் என் மீது நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால், நான் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை. இந்த வெற்றியை என் பெற்றோருக்கும், என் பயிற்சியாளர் விஜய் சர்மாவுக்கும் சமர்ப்பிக்கிறேன். இங்கு நான் கற்றுக்கொண்ட பாடங்களில் கவனம் செலுத்தி, எனது பயிற்சியில் தீவிரம் காட்டு

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

Hidden Talents: பாட்டு, டான்ஸ், மெக்கானிக்... நம்ம கிரிக்கெட் வீரர்களின் மறுபக்கம்..!
வைபவ் சூர்யவன்ஷிக்கு 'இந்த' பலவீனம் இருக்கு! உண்மையை போட்டுடைத்த இந்திய அணி கோச்!