#TokyoOlympics பேட்மிண்டனில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் பி.வி.சிந்து

By karthikeyan VFirst Published Jul 28, 2021, 9:27 AM IST
Highlights

டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்ட க்ரூப் சுற்றில் ஹாங்காங்கின் சியூங்கை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றார் இந்தியாவின் பி.வி.சிந்து.
 

டோக்கியோ ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் மீராபாய் சானு வென்று கொடுத்த வெள்ளி பதக்கத்தை தவிர இதுவரை வேறு பதக்கமே கிடைக்கவில்லை. ஆனால், பாக்ஸிங்கில் மேரி கோம், லவ்லினா மற்றும் பேட்மிண்டனில் பி.வி.சிந்து ஆகியோர் நம்பிக்கையளிக்கின்றனர்.

இஸ்ரேல் வீராங்கனையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு நகர்ந்த இந்தியாவின் பி.வி.சிந்து, இன்று நடந்த க்ரூப் ஜே சுற்றில் ஹாங்காங்கின் சியூங்கை எதிர்கொண்டார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே சியூங் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடிய பி.வி.சிந்து, முதல் செட்டை 21-9 என்றும், இரண்டாவது சுற்றை 21-16 என்றும் கைப்பற்றி வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியையடுத்து, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றார் பி.வி.சிந்து. பி.வி.சிந்து ஒலிம்பிக்கில் பதக்கத்திற்கான நம்பிக்கையளிக்கிறார்.
 

click me!