ஃபோர்ப்ஸ் பட்டியலில் அதிகம் சம்பாதிக்கும் 12வது விளையாட்டு வீராங்கனை பி.வி.சிந்து

By karthikeyan VFirst Published Dec 23, 2022, 2:28 PM IST
Highlights

ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள, அதிகம் சம்பாதிக்கும் டாப் 25 விளையாட்டு வீராங்கனைகள் பட்டியலில் 12வது இடம் பிடித்துள்ளார் பி.வி.சிந்து
 

ஃபோர்ப்ஸ் பிசினஸ் இதழ் டாப் பணக்காரர்கள், அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. ஃபோர்ப்ஸ் இதழில் இடம்பிடிப்பதே பெரிய பெருமையாகவும் கௌரவாமாகவும் பார்க்கப்படுகிறது.

அந்தவகையில், சர்வதேச அளவில் அதிகம் சம்பாதிக்கும் டாப் 25 விளையாட்டு வீராங்கனைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது ஃபோர்ப்ஸ். அந்த பட்டியலில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து 12வது இடம் பிடித்துள்ளார்.

IPL Mini Auction 2023: ஏலத்திற்கு முன்பாக ஐபிஎல் அணிகளுக்கு செம குட் நியூஸ்

27 வயதான சாம்பியன் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. 2016 மற்றும் 2021 ஆகிய 2 ஒலிம்பிக்கிலும் இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுத்தவர். 2019ல் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்கும் சாதனைக்கும் சொந்தக்காரர் பி.வி.சிந்து.

ரூ.59 கோடி வருவாயுடன் பி.வி.சிந்து ஃபோர்ப்ஸ் பட்டியலில் 12வது இடத்தில் உள்ளார்.  2022ம் ஆண்டில் அதிகம் சம்பாதித்த விளையாட்டு வீராங்கனைகள் ஃபோர்ப்ஸ் பட்டியலில் பி.வி.சிந்து 12வது இடத்தை பிடித்துள்ளார்.

ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நாவோமி ஒசாகா தொடர்ச்சியாக 3ம் ஆண்டாக ஃபோர்ப்ஸ் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். $51.1 மில்லியன் சம்பாதிக்கும் நாவோமி ஒசாகா முதலிடத்தில் உள்ளார். 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் $41.3 மில்லியனுடன் 2ம் இடத்தில் உள்ளார்.

IPL Mini Auction 2023: மினி ஏலத்தில் சிஎஸ்கே டார்கெட் செய்யும் 3 வீரர்கள்..!

சீனாவை சேர்ந்த 19 வயதான ஃப்ரீஸ்டைல் ஸ்கையர் ஐலீன் கு என்ற வீராங்கனை $20.1 மில்லியன் வருவாயுடன் ஃபோர்ப்ஸ் பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளார்.
 

click me!