
Tamil Lions vs Punjabi Tigers; GIPKL 2025 : உலகம் முழுவதும் உள்ள கபடி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த குளோபல் இந்தியன் பிரவாசி கபடி லீக் தொடர் இன்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில், ஹோலிஸ்டிக் இன்டர்நேஷனல் பிரவாசி ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் (HIPSA) தலைவர் காந்தி டி. சுரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். குருகிராம் பல்கலைக்கழகத்தில் தொடங்கிய குளோபல் இந்தியன் பிரவாசி கபடி லீக் தொடரின் முதல் சீசனுக்கான முதல் போட்டியில் தமிழ் லயன்ஸ் மற்றும் பஞ்சாப் டைகர்ஸ் அணிகள் மோதுகின்றன.
GI - PKL 2025 : முதல் போட்டியில் Tamil Lions vs Punjabi Tigers பலப்பரீட்சை!
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தமிழ் லயன்ஸ் அணியின் கேப்டன் அஜய் குமார் பஞ்சாப் டைகரஸ் அணியை ரைடு செய்ய அழைத்தார். அதன்படி பஞ்சாப் டைகர்ஸ் அணியில் மிலன் தஹியா முதல் ரைடு சென்று தனது அணிக்காக முதல் புள்ளி எடுத்து கொடுத்தார். அதன் பிறகு அடுத்தடுத்து புள்ளிகளை பஞ்சாப் டைகர்ஸ் அணி பெற்றது.
முதல் 20 நிமிடங்களுக்கான போட்டியில் 4.52 நிமிடங்கள் வரையில் பஞ்சாப் டைகர்ஸ் அணியானது 20 புள்ளிகளுடம் தமிழ் லயன்ஸ் அணியானது 9 புள்ளிகளும் பெற்றிருந்தனர்.
கேஎல் ராகுலின் மகளுக்கு என்ன பெயர் தெரியுமா? அர்த்தம் என்ன?
தமிழ் லயன்ஸ் அணி வீரர்கள்:
அஜய் சாஹல் (ரைடர்), பர்வீன் நந்தல் (ஆல் ரவுண்டர்), அர்பித் துள் (டிஃபண்டர்), பர்வேஷ் ஹூடா (டிஃபண்டர்), சச்சின் ஜோகிந்தர் (ரைடர்), ஸ்ரீ பகவான் (ரைடர்),
இவர்கள் தவிர,
ஆதித்யா ஹூடா, மந்தீப் ரூஹல், ராக்கி யாதவ், அலி அகமது, ஹர்ஷா, ஹர்ஷன், நீரஜ் சவால்கர், ஜான் பெர்கூஸ் எல்ஜின் டன்லோப், மார்செல் பர்னாபஸ், ஆதித்யா ராணா
பஞ்சாப் டைகர்ஸ் அணி:
விகாஸ் தஹியா, மிலன் தஹியா, உமேஷ் கில் ஹிதேஷ் தஹியா, அஜய் மோர் ஆகாஷ் நார்வல், மனோஜ்
இவர்கள் தவிர மற்ற வீரர்கள்
அன்கித் தஹியா, சவின் நார்வல், அருண், லுக்மன், பூபந்தர் பால் தருண், நிகில், ஓமென் முசேரு, டேனியல் இஸாக், லலித் சங்க்வன், லக்விந்தர் சிங்
இனி சிக்சர் மழை தான்! சிஎஸ்கேவில் இணைந்த 'பேபி டி வில்லியர்ஸ்'! தோனியின் ஸ்மார்ட் மூவ்!
தமிழ் லயன்ஸ் மற்றும் பஞ்சாப் டைகர்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டியானது சோனி ஸ்போர்ஸ் 2 மற்றும் ஃபேன்கோடில் லைவ் ஸ்டிரீம் செய்யப்படுகிறது. ஆனால், Fancode ஓடிடியில் லைவ் ஸ்டிரீம் செய்யப்படுவதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் போட்டியின் முதல் பகுதி நேரம் சவுண்ட் இல்லாமல் போட்டியானது ஒளிபரப்பானது. இதுவரையில் சவுண்ட் வரவில்லை.
இதே போன்று எல்லா போட்டிகளும் சோனி ஸ்போர்ட்ஸ் 3 மற்றும் Fancodeல் லைவ் ஸ்டிரீம் செய்யப்படுகிறது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு ஹர்யான்வி ஷார்க்ஸ் மற்றும் தெலுங்கு பாந்தர்ஸ் அணிகளும், இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் மராத்தி வால்ந்தர்ஸ் மற்றும் போஜ்புரி லீபார்ட்ஸ் அணிகளும் மோதுகின்றன.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.