GI-PKL கபடி லீக் இன்று கோலாகலமாக தொடக்கம்! முதல் நாளில் 3 போட்டிகள்! முழு விவரம்!

Published : Apr 18, 2025, 01:16 PM IST
GI-PKL கபடி லீக் இன்று கோலாகலமாக தொடக்கம்! முதல் நாளில் 3 போட்டிகள்! முழு விவரம்!

சுருக்கம்

GI-PKL கபடி லீக் போட்டி ஹரியானாவின் குருகிராமில் இன்று தொடங்குகிறது. தொடக்க நாளில் 3 போட்டிகள் நடைபெற உள்ளன. 

Global Indian Pravasi Kabaddi League: முதல் உலக இந்திய பிரவாசி கபடி லீக் (GI-PKL) இன்று குருகிராமில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த லீக்கில் எகிப்து, கென்யா, அர்ஜென்டினா, ஜெர்மனி, இங்கிலாந்து, நார்வே மற்றும் போலந்து போன்ற நாடுகளின் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். ஏப்ரல் 30ம் தேதி வரை நடக்கும் இந்த தொடரில் 6 ஆண்கள் அணி, 6 பெண்கள் அணி என மொத்தம் 12 அணிகள் விளையாடுகின்றன.

12 அணிகள் என்னென்ன?

ஆண்கள் அணிகளை பொறுத்தவரை மராத்தி வல்சர்ஸ், போஜ்புரி லியோபார்ட்ஸ், தெலுங்கு பாந்தர்ஸ், தமிழ் லயன்ஸ், பஞ்சாபி டைகர்ஸ் மற்றும் ஹரியான்வி ஷார்க்ஸ் ஆகிய 6 அணிகள் உள்ளன. பெண்கள் அணிகளை பொறுத்தவரை மராத்தி ஃபால்கன்ஸ், போஜ்புரி லியோபார்ட்ஸ், தெலுங்கு சீட்டாஸ், தமிழ் லயன்ஸ், பஞ்சாபி டைகர்ஸ் மற்றும் ஹரியான்வி ஈகிள்ஸ் ஆகிய 6 அணிகள் இருக்கின்றன.

தமிழ் லயன்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் மோதல் 

தொடக்க நாளான இன்று மொத்தம் 3 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. தல் GI-PKL போட்டியில் தமிழ் லயன்ஸ் அணியும் பஞ்சாபி டைகர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 6.00 மணிக்கு தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து 7 மணிக்கு தொடங்கும் 2வது போட்டியில்  ஹரியான்வி  ஷார்க்ஸ் மற்றும் தெலுங்கு பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதன்பிறகு 8 மணிக்கு தொடங்கும் போட்டியில்  மராத்தி வல்சர்ஸ் மற்றும் போஜ்புரி லியோபார்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஒவ்வொரு அணியிலும் தரம்வாய்ந்த வீரர்கள்

ஒவ்வொரு அணியிலும் தரம்வாய்ந்த வீரர்கள் இருப்பதால் போட்டிகள் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த திறமையாளர்களை ஒன்றிணைக்கும் இந்த தனித்துவமான சர்வதேச கபாடி லீக்கின் முதல் பதிப்பை நடத்த குருகிராம் பல்கலைக்கழகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

குளோபல் இந்தியன் பிரவாசி கபடி லீக் 2025: 12 அணிகளின் கேப்டன்கள் யார்? யார்? முழு விவரம்!

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் 

இந்த கபடி தொடருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஹோலிஸ்டிக் இன்டர்நேஷனல் பிரவாசி ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் (HIPSA) தலைவர் காந்தி டி. சுரேஷ் கூறுகையில்,''குருகிராம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஏற்பாடுகளில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த லீக் இந்திய விளையாட்டுக்கு உலகளாவிய அங்கீகாரத்தைத் தரும். GI-PKL ஐ நடத்துவது எங்களுக்கு மிகவும் பெருமையான விஷயம். வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த வசதிகளை உறுதி செய்ய நாங்கள் இரவு பகலாக உழைத்துள்ளோம். இந்த லீக் வெறும் போட்டி அல்ல - இது நமது விளையாட்டு மனப்பான்மை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் கொண்டாட்டம்'' என்றார்.

போட்டிகள் தொடங்கும் நேரம்? எதில் பார்க்கலாம்?

ஆண்கள் பிரிவு போட்டி இன்று தொடங்கும் நிலையில், பெண்கள் போட்டி நாளை (ஏப்ரல் 19) தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் மராத்தி பால்கன்ஸ் அணியும் தெலுங்கு சீட்டாஸ் அணியும் மோதுகின்றன. இந்திய பிரவாசி கபடி லீக் தொரில் ஒவ்வொரு நாளும் மூன்று போட்டிகள் நடைபெறும். இந்த போட்டிகள் மாலை 6:00 மணி முதல் தொடங்கும். அனைத்து போட்டிகளும் Sony Sports 3 மற்றும் DD Sports இல் நேரடியாக ஒளிபரப்பப்படும். 

லீக் போட்டிகள் ஏப்ரல் 27 வரை நடைபெறும், அதைத் தொடர்ந்து ஏப்ரல் 28 அன்று ஆண்கள் அரையிறுதிப் போட்டிகளும், ஏப்ரல் 29 அன்று பெண்கள் அரையிறுதிப் போட்டிகளும் நடைபெறும். ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் இறுதிப் போட்டி ஏப்ரல் 30 அன்று நடைபெறும்.

குளோபல் இந்தியன் பிரவாசி கபடி லீக் 2025; முதல் சீசனுக்கான சாம்பியன்ஷிப் டிராபி வெளியீடு!

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

Shubman Gill: டி20-ல் படுமோசம்.. அதனால்தான் நீக்கினோம்.. அகர்கர் அறிவிப்பு
அந்த ஒரு தோல்வி மனசே உடைஞ்சு போச்சு.. உலகக்கோப்பை தோல்வி குறித்து மனம் திறந்த ரோகித்