ஐபிஎல் தொடரில் திடீர் மாற்றம்.. ரசிகர்கள் அதிர்ச்சி

Asianet News Tamil  
Published : May 05, 2018, 10:38 AM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
ஐபிஎல் தொடரில் திடீர் மாற்றம்.. ரசிகர்கள் அதிர்ச்சி

சுருக்கம்

pune play off matches set to shifted to kolkata

ஐபிஎல் 11வது சீசன் கடந்த ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த மாதம் 27ம் தேதியுடன் ஐபிஎல் நிறைவடைகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 8 அணிகள் ஐபிஎல் தொடரில் ஆடிவருகின்றன.

இவற்றில் ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு அணியுடன் இரண்டு முறை மோதிக்கொள்ளும். அவற்றில் ஒரு போட்டி ஒவ்வொரு அணியின் சொந்த மைதானத்தில் நடைபெறும். மொத்தம் 56 லீக் போட்டிகள் நடைபெறும்.

முதல் 4 இடத்தை பிடித்துள்ள அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்காக இரண்டு தகுதி சுற்று போட்டிகள் நடைபெறும். புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள், முதல் தகுதி சுற்று போட்டியில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.

புள்ளி பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் இருக்கும் அணிகள், எலிமினேட்டர் சுற்றில் மோதும். இதில் தோற்கும் அணி தொடரில் இருந்து வெளியேறும். இதில் வெற்றி பெறும் அணிக்கும், முதல் தகுதி சுற்றில் தோல்வியடைந்த அணிக்கும் இடையே இரண்டாவது தகுதி சுற்று போட்டி நடைபெறும். இதில் வெற்றி பெறும் அணி இறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.

கடந்த ஐபிஎல் இறுதி போட்டியில் மும்பை அணியும் புனே அணியும் மோதின. மும்பை அணி கோப்பையை வென்றது. எனவே இந்த ஐபிஎல்லின் முதல் தகுதி சுற்று போட்டியும் இறுதி போட்டியும் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகின்றன.

எலிமினேட்டர் மற்றும் இரண்டாவது தகுதி சுற்று போட்டிகள் புனேவில் நடைபெற இருந்தது. ஆனால், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொந்த மைதான போட்டிகள் புனேவில் நடைபெற்று வருகின்றன. அதனால் புனேவில் நடைபெற இருந்த எலிமினேட்டர் மற்றும் இரண்டாவது தகுதி சுற்று ஆகிய இரண்டு போட்டிகளும் கொல்கத்தா மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

மே 22 - முதல் தகுதி சுற்று போட்டி - மும்பை வான்கடே மைதானம்

மே 23 - எலிமினேட்டர் போட்டி - கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம்

மே 25 - இரண்டாவது தகுதி சுற்று போட்டி - கொல்கத்தா ஈடன் கார்டன்

மே 27 - இறுதி போட்டி - மும்பை வான்கடே மைதானம்
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs NZ 2வது ஓடிஐயில் ரோகித், விராட் கோலி சொதப்புவார்கள்.. ஆருடம் சொன்ன அதிரடி வீரர்!
Virat Kohli: ஜஸ்ட் 1 ரன்னில் சச்சினின் சாதனையுடன் போட்டிப்போடும் கோலி