kylian mbappe: மெஸ்ஸி , ரொனால்டோ நிச்சயமா இல்லை! உலகிலேயே அதிகமாக ஊதியம் பெறும் கால்பந்துவீரர் யார் தெரியுமா?

Published : Oct 08, 2022, 04:29 PM IST
kylian mbappe: மெஸ்ஸி , ரொனால்டோ நிச்சயமா இல்லை! உலகிலேயே அதிகமாக ஊதியம் பெறும் கால்பந்துவீரர் யார் தெரியுமா?

சுருக்கம்

உலகளவில் கால்பந்து விளையாட்டில் அதிகமாக ஊதியம் பெறுபவர் அர்ஜென்டீனா வீரர் லயோனல் மெஸ்ஸோ அல்லது போர்ச்சுகல் அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவோ அல்ல. 

உலகளவில் கால்பந்து விளையாட்டில் அதிகமாக ஊதியம் பெறுபவர் அர்ஜென்டீனா வீரர் லயோனல் மெஸ்ஸோ அல்லது போர்ச்சுகல் அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவோ அல்ல. 

அப்போ வேறு யாரு? இருவரையும் முறியடித்துஒரு இளம் வீரர் ஊதியம் பெற்றுள்ளார் என போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. ரொனால்டோ, மெஸ்ஸி இருவரும் அதிக ஊதியம் பெறும் கால்பந்துவீரர்கள் பட்டியலில் கடந்த 8 ஆண்டுகளாக முதலிடத்தைத் தக்கவைத்த நிலையில் அவர்களை ஒரு இளைஞர் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

பரபரப்பான போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி பெங்களூரு புல்ஸ் அணி வெற்றி

பிரான்ஸின் பாரிஸ் செயின்ட் ஜெர்மெயின்(பிஎஸ்ஜி) அணியின் பார்வேர்டு வீரர் கயலின் எம்பாபே அதிகமான ஊதியம் பெறு கால்பந்துவீரர் என போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

2022-23ம் ஆண்டு சீசனில் 23வயதான கயலின் எம்பாபே 12.80 கோடி டாலர் ஊதியமாகப் பெற்றுள்ளார். இவரின் சக அணி வீரர் மெஸ்ஸி 12 கோடி டாலர்தான் ஊதியம் பெறுகிறார். மாஸ்செஸ்டர் யுனைடெட் அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 10 கோடி டாலருடன் 3வது இடத்தில் உள்ளார்.

பிஎஸ்ஜி நெய்மர் 8.70 கோடி டாலரும், லிவர்பூல் பார்வேர்டு வீரர் முகமது சலாஹ் 5.30 கோடி டாலரும் ஊதியம் பெறுகிறார்கள். இவர்கள் 5 பேரும்தான்உலகிலேயே அதிகமான ஊதியம் பெறும் டாப்-5 கால்பந்துவீரர்கள் என போர்ப்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

இந்திய அணியை பார்த்தா பெரிய ஆச்சரியமா இருக்கு..! மிரண்டுபோன பாக்., முன்னாள் ஜாம்பவான்

பொருஷியா டார்ட்முன்ட் அணியின் ஒப்பந்தம் முடிந்தபின் தற்போது மான்செஸ்டர் சிட்டி அணியில் சேர்ந்துள்ள எர்லிங் ஹாலேண்ட் டாப்-10 வரிசையில் இடம் பெற்றுள்ளார். இவரின் ஆண்டு வருமானம், 3.90 கோடி டாலராகும். 

பிரான்ஸ் வீரர் எம்பாபே, நார்வே வீரர் ஹாலேண்ட் ஆகிய இருவர் மட்டுமே 30வயதுக்குள் இருப்பவர்கள். ஆனால், மெஸ்ஸி, ரொனால்டோ ஆகிய இருவரும் தங்களின் கால்பந்து வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் நிற்கிறார்கள். 

2வது டி20யிலும் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா

ஒட்டுமொத்த அதிகமாக ஊதியம் பெறும் டாப்-10 கால்பந்துவீரர்களின் ஒட்டுமொத்த ஊதியம், 65.20 கோடி டாலராகும். இதுகடந்த ஆண்டைவிட 11 சதவீதம் அதிகம், கடந்த ஆண்டில் 58.50 கோடி டாலராக இருந்தது.


 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!
U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!