
புரோ கபடி சீசன்-5 போட்டியின் 53-வது ஆட்டத்தில் யு-மும்பா அணி 38-32 என்ற புள்ளிகள் கணக்கில் அரியாணா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தியது.
புரோ கபடி சீசன்-5 போட்டியின் 53-வது ஆட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தின் இரு அணிகளும் சிறப்பாக விளையாடின. முதல் பாதி ஆட்டநேர முடிவில் யு-மும்பா அணி 20-15 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலைப் பெற்றது.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் அரியாணா வீரர்கள் அபாரமாக ஆடினர், இருந்தும் அந்த அணியின் சரிவை தடுக்க முடியவில்லை.
இறுதியில் யு-மும்பா அணி 38-32 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி கண்டது.
யு-மும்பா தரப்பில் கேப்டன் அனுப் குமார் 8 புள்ளிகளையும், ஸ்ரீகாந்த் 6 புள்ளிகளையும் கைப்பற்றினர்.
அரியாணா தரப்பில் விகாஸ் 9 புள்ளிகளைக் கைப்பற்றினார்.
இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள யு-மும்பா அணி 4-வது வெற்றியைப் பெற்றுள்ளது. அரியாணா அணிக்கு இது 2-வது தோல்வியாகும்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.