
புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 110-வது ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி 35-45 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை தோற்கடித்தது.
புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 110-வது ஆட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் முதல் 10 நிமிடங்கள் வரை இரு அணிகளும் சிறப்பாக ஆடிய நிலையில், அஜய் தாகுர் ஆட்டமிழக்க பெங்களூரின் கை ஓங்கியது. ஆல் ஔட் ஆகும் நிலைக்கு தள்ளப்பட்ட தமிழ் தலைவாஸ் அணி, தர்ஷன், விஜின் ஆகியோரின் சூப்பர் டேக்கிள் மூலம் அதிலிருந்து தப்பியது. எனினும், 19-வது நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் ஆல் ஔட் ஆனது.
முதல் பாதி ஆட்டநேர முடிவில் 19-10 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது பெங்களூரு.
பின்னர் நடைப்பெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் அபாரமாக ஆடிய ரோஹித் குமார் தனது 10-வது புள்ளியைக் கைப்பற்றி, சூப்பர் 10 அந்தஸ்தைப் பெற்றார்.
மறுமுனையில் பெங்களூரை சமாளிக்க முடியாமல் திணறிய தமிழ் தலைவாஸ் 2-வது முறையாக ஆல் ஔட் ஆனது. தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு 30-வது நிமிடத்தில் 3-வது முறையாக தமிழ் தலைவாஸை ஆல் ஔட் செய்து, 37-16 என முன்னிலைப் பெற்றது.
பின்னர் அபாரமாக ஆடிய தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜய், தொடர்ச்சியாக புள்ளிகளை குவித்து சூப்பர் 10 அந்தஸ்தைப் பெற்றார். இதனால் பெங்களூரு அணி ஆல் ஔட் ஆனது.
இறுதியில் 45-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு அணி, தமிழ் தலைவாஸை பங்கமாக தோற்கடித்தது.
தற்போது 5-வது வெற்றியை பெற்ற பெங்களூரு 39 புள்ளிகளுடன் 'பி' பிரிவில் 5-ஆவது இடத்துக்கு முன்னேறியது.
இந்த தோல்வியின் மூலம் சென்னையில் நடைபெற்ற ஆறு ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் கூட தமிழ் தலைவாஸ் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.