இன்றுத் தொடங்கும் யு-17 கால்பந்து போட்டியில் அமெரிக்காவுடன் மோதுகிறது இந்தியா…

Asianet News Tamil  
Published : Oct 06, 2017, 09:32 AM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
இன்றுத் தொடங்கும் யு-17 கால்பந்து போட்டியில் அமெரிக்காவுடன் மோதுகிறது இந்தியா…

சுருக்கம்

India vs america U-17 football tournament starts today

யு-17 என்னும் 17 வயதுக்கு உள்பட்டோருக்கான ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி புதுடெல்லி, நவி மும்பை நகரங்களில் இன்றுத் தொடங்குகிறது. 

இதில் டெல்லியில் நடைபெறும் 'ஏ' பிரிவு முதல் ஆட்டத்தில் கொலம்பியா - கானா அணிகள் மோதுகின்றன.

இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா - அமெரிக்கா அணிகள் களம் காண்கின்றன.

'பி' பிரிவு முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து - துருக்கி அணிகள் நவி மும்பையிலும், 2-வது ஆட்டத்தில் பராகுவே - மாலி அணிகளும் எதிர்கொள்கின்றன. இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரும் 28-ஆம் தேதி வரை இந்தியாவின் 6 நகரங்களில் நடைபெறவுள்ளது.

இதர நாட்டு அணிகள் தகுதிச்சுற்று மூலம் இப்போட்டிக்கு தகுதிபெற்ற நிலையில், உலகக் கோப்பை போட்டியை நடத்தும் நாடு என்ற முறையில் இந்திய அணி நேரடியாக தகுதிபெற்றுள்ளது.

இந்தியா, தனது முதல் ஆட்டத்திலேயே பலம் வாய்ந்த அமெரிக்க அணியை எதிர்கொள்கிறது.

இந்திய அணியைப் பொருத்தவரையில், கடந்த 2015-ஆம் ஆண்டு இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஜெர்மனியின் நிகோலாய் ஆடம், நாடு முழுவதுமாக தேர்வு செய்து ஓர் அணியை கட்டமைத்திருந்தார்.

எனினும், கடந்த மார்ச் மாதம் அவரது பதவிக் காலம் முடிவுக்கு வர, போர்ச்சுகீசிய நாட்டைச் சேர்ந்த லூயிஸ் நார்டன் டி மாடோஸ் பயிற்சியாளராக பொறுப்பேற்றார்.

நிகோலாய் கட்டமைத்திருந்த அணியில், ஒரு சில மாற்றங்களை மேற்கொண்டு உலகக் கோப்பைக்கான அணியை உருவாக்கினார் லூயிஸ். அமர்ஜித் சிங் தலைமையிலான இந்த அணி 7 மாதங்களில் உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகியுள்ளது.

அமெரிக்க அணியைப் பொருத்தவரையில், லீக் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட பலம்வாய்ந்த அணியாக இருக்கிறது. அந்த அணியின் இரு வீரர்கள், ஐரோப்பிய கால்பந்து கிளப்புகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

யார் கண்ணு பட்டுச்சோ தெரியல.. IPL-ல் விலகும் வைபவ் சூர்யவன்ஷி? ரசிகர்கள் ஷாக்.. என்ன நடந்தது?
Lungi Ngidi Injury: தலையில் அடிபட்டு மருத்துவமனையில் லுங்கி இங்கிடி... இப்போது எப்படி இருக்கிறார்..?