கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? அடுத்த மாதம் இந்தியா - இலங்கை மோதும் டெஸ்ட் கிரிக்கெட் ஆரம்பம்…

Asianet News Tamil  
Published : Oct 05, 2017, 09:23 AM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? அடுத்த மாதம் இந்தியா - இலங்கை மோதும் டெஸ்ட் கிரிக்கெட் ஆரம்பம்…

சுருக்கம்

Are cricket fans ready? Next month India and Sri Lanka crash Test debut ...

இந்தியா - இலங்கை மோதும் மூன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள், மூன்று ஒருநாள் ஆட்டங்கள், மூன்று டி-20 ஆட்டங்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் 16-ஆம் தேதி தொடங்குகிறது.

இந்தத் தொடருக்கு முன்பாக, நவம்பர் 11-ஆம் தேதி முதல் மூன்று நாள் பயிற்சி ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெற இருக்கிறது. 

அதனைத் தொடர்ந்து நவம்பர் 16 முதல் 20-ஆம் தேதி வரையில் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. 

இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் நவம்பர் 24 முதல் 28-ஆம் தேதி வரை நாகபுரியில் நடக்கிறது.

மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் டிசம்பர் 2 முதல் 6-ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற இருக்கிறது.

அதனைத் தொடர்ந்து முதல் ஒருநாள் ஆட்டம் டிசம்பர் 10-ஆம் தேதி தர்மசாலாவிலும், 2-வது ஒருநாள் ஆட்டம் டிசம்பர் 13-ஆம் தேதி மொஹாலியிலும் 3-வது ஒருநாள் ஆட்டம் டிசம்பர் 17-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.

அதேபோல், முதல் டி20 ஆட்டம் டிசம்பர் 20-ஆம் தேதி கட்டாக்கிலும், 2-வது ஆட்டம் 22-ஆம் தேதி இந்தூரிலும், 3-வது ஆட்டம் 24-ஆம் தேதி மும்பையிலும் நடைபெறவுள்ளது.

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Nat Sciver-Brunt: கண்ணில் கண்ணீருடன் கேப்டன்... உலகக்கோப்பை ஃபைனலில் மகனுடன் நெகிழ்ச்சி!
IND vs ENG 3rd T20: வேஸ்ட் லக்கேஜ்! 2 வீரர்கள் நீக்கம்! சஞ்சு சாம்சன் கம்பேக்! இந்தியா பிளேயிங் லெவன்!