டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வேவுடன் மோதும் மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு…

Asianet News Tamil  
Published : Oct 05, 2017, 09:12 AM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வேவுடன் மோதும் மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு…

சுருக்கம்

West Indies team declare Zimbabwe in Test cricket

ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வே செல்லும் மேற்கிந்தியத் தீவுகள் அணி, அக்டோபர் 15 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் ஜிம்பாப்வே 'ஏ' அணியுடன் மோதுகிறது.

பின்னர், ஜிம்பாப்வே அணியுடனான முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 21 முதல் 25-ஆம் தேதி வரையிலும், 2-வது டெஸ்ட் 29 முதல் நவம்பர் 2-ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.

இதில், பங்கேற்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

கேப்டன் ஜேசன் ஹோல்டர் தலைமையிலான அணிக்கு, கிரெய்க் பிரத்வெயிட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் விவரம்:

தேவேந்திர பிஷு, ஜெர்மெய்ன் பிளாக்வுட், ரோஸ்டன் சேஸ், மிகெல் கம்மின்ஸ், ஷேன் டெளரிச், ஷானன் கேப்ரியல், ஷிம்ரன் ஹெட்மைர், கைல் ஹோப், ஷாய் ஹோப், அல்ஜாரி ஜோசப், கிரன் பாவெல், ரேமன் ரீஃபர், கெமர் ரோச் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Nat Sciver-Brunt: கண்ணில் கண்ணீருடன் கேப்டன்... உலகக்கோப்பை ஃபைனலில் மகனுடன் நெகிழ்ச்சி!
IND vs ENG 3rd T20: வேஸ்ட் லக்கேஜ்! 2 வீரர்கள் நீக்கம்! சஞ்சு சாம்சன் கம்பேக்! இந்தியா பிளேயிங் லெவன்!