புரோ கபடி: யு-மும்பா அணிக்கு படுதோல்வியை பரிசளித்தது அரியாணா ஸ்டீலர்ஸ்…

Asianet News Tamil  
Published : Oct 05, 2017, 08:55 AM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
புரோ கபடி: யு-மும்பா அணிக்கு படுதோல்வியை பரிசளித்தது அரியாணா ஸ்டீலர்ஸ்…

சுருக்கம்

Pro Kabaddi Aurani Stylers has been rewarded for the U-Mumbai team ...

புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 108-வது ஆட்டத்தில் அரியாணா ஸ்டீலர்ஸ் அணி 41-30 என்ற புள்ளிகள் கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தியது.

புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 108-வது ஆட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் அபாரமாக ஆடிய அரியாணா அணி, யு மும்பா கேப்டன் அனுப் குமாரை வீழ்த்தி தனது முதல் புள்ளியை தொடங்கியது.

அதன்பிறகு யு மும்பா வீரர் ஸ்ரீகாந்த் அடுத்தடுத்து இரு புள்ளிகளைப் பெற 5-வது நிமிடத்தில் இரு அணிகளும் 3-3 என்ற கணக்கில் சமநிலையில் பெற்றன.

இதைத் தொடர்ந்து அரியாணா வீரர் விகாஸ் கன்டோலா தொடர்ச்சியாக புள்ளிகளைக் கைப்பற்ற அரியாணா அணி 7-4 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

யு மும்பா வீரர் காசிலிங் அடாகே 2 புள்ளிகளை கைப்பற்றியும் எனினும், அரியாணா வீரர் வாஸிர் சிங் ஒரு புள்ளியை கைப்பற்ற, அந்த அணி 8-7 என்ற கணக்கில் முன்னிலையை தக்கவைத்துக் கொண்டது.

ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் ரைடு சென்ற யு மும்பா கேப்டன் அனுப் குமார் 'சூப்பர் ரைடு' மூலம் 3 புள்ளிகளைப் பெற அந்த அணி 10-8 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.

இதன்பிறகு அரியாணா ரைடர்கள் தாஹியாவும், விகாஸ் கன்டோலாவும் தொடர்ச்சியாக புள்ளிகளைக் குவிக்க 16-வது நிமிடத்தில் 14-10 என்ற கணக்கில் அரியாணா முன்னேறியது. இதனால் மீண்டும் பின்னடைவைச் சந்தித்த யு மும்பா அணி 11-வது நிமிடத்தில் 'ஆல் ஔட்' ஆனதால் அரியாணா 19-14 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.

தொடர்ந்து தாஹியாவும், விகாஸ் கன்டோலாவும் அபாரமாக ஆட, முதல் பாதி ஆட்டநேர முடிவில் 22-16 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் இருந்தது அரியாணா.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் யு மும்பா கேப்டன் அனுப் குமார் தொடர்ந்து போராடி 33-வது நிமிடத்தில் 24-32 என்ற கணக்கில் அந்த அணி பின்தங்கியிருந்தது.

மறுபுறம், தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய அரியாணா அணி, 36-வது நிமிடத்தில் 2-வது முறையாக யு மும்பா அணியை ஆல் ஔட் செய்ததால் அந்த அணி 38-27 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இறுதியில் அரியாணா 41-30 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றி கண்டது.

அரியாணா தரப்பில் தாஹியா, விகாஸ் கன்டோலா ஆகியோர் தலா 8 புள்ளிகளை கைப்பற்றினர்.

யு மும்பா தரப்பில் கேப்டன் அனுப் குமார் 10 புள்ளிகளைக் கைப்பற்றி 'சூப்பர் 10' அந்தஸ்தை பெற்றார்.

10-வது வெற்றியின் மூலம் அரியாணா அணி, 'ஏ' பிரிவு புள்ளிகள் பட்டியலில் 64 புள்ளிகளுடன் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது.

இதுவரை 19 ஆட்டங்களில் விளையாடி 9-வது தோல்வியை சந்தித்துள்ள யு மும்பா அணி, 'ஏ' பிரிவு புள்ளிகள் பட்டியலில் 54 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்தில் உள்ளது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

யார் கண்ணு பட்டுச்சோ தெரியல.. IPL-ல் விலகும் வைபவ் சூர்யவன்ஷி? ரசிகர்கள் ஷாக்.. என்ன நடந்தது?
Lungi Ngidi Injury: தலையில் அடிபட்டு மருத்துவமனையில் லுங்கி இங்கிடி... இப்போது எப்படி இருக்கிறார்..?