இன்று தொடங்குகிறது 84-வது ரஞ்சிக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி…

Asianet News Tamil  
Published : Oct 06, 2017, 09:27 AM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
இன்று தொடங்குகிறது 84-வது ரஞ்சிக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி…

சுருக்கம்

Today starts the 84th Ranji Trophy match ...

இன்று தொடங்குகிறது 84-வது ரஞ்சிக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி.

இன்று தொடங்கும் 84-வது ரஞ்சிக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவு ஆட்டங்களில் டெல்லி - அஸ்ஸாம் அணிகள் டெல்லியில் மோதுகின்றன. ஐதராபாத் - மகாராஷ்டிரம் அணிகள் ஐதராபாதில் மோதுகின்றன. உத்தரப் பிரதேசம் - இரயில்வே அணிகள் லக்னெளவில் மோதுகின்றன.

'பி' பிரிவு ஆட்டங்களில், அரியாணா - செளராஷ்டிரம் அணிகள் மோதும் ஆட்டம் ரோத்தக்கில் நடைபெறுகிறது. கேரளா - ஜார்க்கண்ட் மோதும் ஆட்டம் திருவனந்தபுரத்திலும், ராஜஸ்தான் - ஜம்மு காஷ்மீர் மோதும் ஆட்டம் ஜெய்பூரிலும் நடக்கிறது.

'சி' பிரிவில் மத்திய பிரதேசம் - பரோடா அணிகள் மோதும் ஆட்டம் இந்தூரிலும், தமிழ்நாடு - ஆந்திர பிரதேசம் அணிகள் சந்திக்கும் ஆட்டம் சென்னையிலும், ஒடிஸா - திருபுரா அணிகள் கட்டாக்கிலும் எதிர்கொள்கின்றன.

'டி' பிரிவில் கோவா - சத்தீஸ்கர் அணிகள் கோவாவிலும், இமாச்சலப் பிரதேசம் - பஞ்சாப் அணிகள் தர்மசாலாவிலும், சர்வீஸஸ் - பெங்கால் அணிகள் டெல்லியிலும் மோதுகின்றன.

தமிழ்நாடு அணி:

அபினவ் முகுந்த் (கேப்டன்), இந்திரஜித், அபராஜித், அஸ்வின், கெளஷிக் காந்தி, ஜெகதீசன், லக்ஷ்மன், ரங்கராஜன், ரோஹித், சாய் கிஷோர், ரஹில் ஷா, கே.விக்னேஷ், எல்.விக்னேஷ், முரளி விஜய், வாஷிங்டன் சுந்தர்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Nat Sciver-Brunt: கண்ணில் கண்ணீருடன் கேப்டன்... உலகக்கோப்பை ஃபைனலில் மகனுடன் நெகிழ்ச்சி!
IND vs ENG 3rd T20: வேஸ்ட் லக்கேஜ்! 2 வீரர்கள் நீக்கம்! சஞ்சு சாம்சன் கம்பேக்! இந்தியா பிளேயிங் லெவன்!