Pro Kabaddi League: கடைசி ஒன்றரை நிமிடத்தில் கோட்டை விட்ட தமிழ் தலைவாஸ்.! பரபரப்பான போட்டி டையில் முடிந்தது

Published : Oct 08, 2022, 10:14 PM IST
Pro Kabaddi League: கடைசி ஒன்றரை நிமிடத்தில் கோட்டை விட்ட தமிழ் தலைவாஸ்.! பரபரப்பான போட்டி டையில் முடிந்தது

சுருக்கம்

புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான பரபரப்பான போட்டி கடைசியில் டையில் முடிந்தது.  

புரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் நேற்று தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் 41 போட்டிகள் பெங்களூருவிலும், அதற்கடுத்த போட்டிகள் புனே மற்றும் ஹைதராபாத் நகரங்களில் நடக்கின்றன.

முதல் நாளான நேற்று 3 போட்டிகள் நடந்த நிலையில், இன்று நடந்த முதல் போட்டி டை ஆனது. புனேரி பல்தான் மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகளுக்கு இடையேயான பரபரப்பான போட்டி கடைசியில் 34-34 என டையில் முடிந்தது. 

இதையும் படிங்க - Pro Kabaddi League: பரபரப்பான போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி பெங்களூரு புல்ஸ் அணி வெற்றி

அதற்கடுத்த போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. பெங்களூரு காண்டிவீரா ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டி தொடக்கம் முதலே மிகவும் மிகவும் பரபரப்பாக இருந்தது. இரு அணிகளுமே கடுமையாக போட்டியிட்டன. ஆரம்பத்தில் குஜராத் அணி முன்னிலை வகித்த நிலையில், முதல் பாதி முடிவில் பின் தங்கியிருந்த தமிழ் தலைவாஸ் அணி, 2ம் பாதியில் அபாரமாக ஆடி கூடுதல் புள்ளிகளை பெற்று முன்னிலை பெற்றது. 

இதையும் படிங்க - இந்திய அணியை பார்த்தா பெரிய ஆச்சரியமா இருக்கு..! மிரண்டுபோன பாக்., முன்னாள் ஜாம்பவான்

தமிழ் தலைவாஸ் 30 புள்ளிகளை பெற, 27 புள்ளிகளுடன் பின் தங்கியிருந்த குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி கடைசி ஒன்றரை நிமிடம் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், கடைசி 3 ரைடில் 4 புள்ளிகளை பெற, தமிழ் தலைவாஸ் அணி ஒரு புள்ளி மட்டுமே பெற, கடைசியில் ஆட்டம் 31-31 என டையில் முடிந்தது. 2ம் பாதியில் சிறப்பாக ஆடி முன்னிலை பெற்ற தமிழ் தலைவாஸ் அணி கடைசி ஒரு நிமிடத்தில் கோட்டைவிட்டது.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IPL: கம்மின்ஸுக்கு என்னாச்சு? SRH கேப்டனானார் இஷான் கிஷன்.. அட! துணை கேப்டன் இவரா?
7 டூ 8.. ஜெர்சி நம்பரை திடீரென மாற்றிய 'தல' தோனி! பின்னணியில் இப்படி ஒரு காரணமா?