புரோ கபடி லீக்: ஹரியானாவை வீழ்த்தி முதலிடத்தில் நீடிக்கும் பெங்களூரு! புனேயிடம் தமிழ் தலைவாஸ் போராடி தோல்வி

Published : Nov 09, 2022, 10:12 PM IST
புரோ கபடி லீக்: ஹரியானாவை வீழ்த்தி முதலிடத்தில் நீடிக்கும் பெங்களூரு! புனேயிடம் தமிழ் தலைவாஸ் போராடி தோல்வி

சுருக்கம்

புரோ கபடி லீக் தொடரின் இன்றைய போட்டியில் புனேரி பல்தான் அணியிடம் 35-34 என்ற புள்ளி கணக்கில் போராடி தோல்வியை தழுவியது தமிழ் தலைவாஸ் அணி.  

புரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனின் தொடக்கத்தில் தொடர் தோல்விகளை தழுவிவந்த தமிழ் தலைவாஸ் அணி, தொடரின் பிற்பாதியில் வலுவான அணிகளை எல்லாம் தொடர்ச்சியாக வீழ்த்தி வெற்றிகளை பெற்றுவந்த நிலையில், இன்று புனேரி பல்தானிடம் தோற்றது. 

டபாங் டெல்லி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகளை வீழ்த்திய தமிழ் தலைவாஸ் அணி, தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளையும் வீழ்த்தி வெற்றி பெற்றது. புனேரி பல்தானை 35-34 என வீழ்த்திய தமிழ் தலைவாஸ் அணி, அதே 35-34 என்ற புள்ளி கணக்கில் இன்று புனேரி பல்தானிடம் தோற்றது. 

டி20 உலக கோப்பை: அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

35-34 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸிடம் தோற்ற புனேரி பல்தான் அணி, அதே புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸை வீழ்த்தி பழிதீர்த்தது. பரபரப்பான இந்த போட்டியில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது தமிழ் தலைவாஸ் அணி.

இன்று நடந்த முதல் போட்டியில் பெங்களூரு புல்ஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. அந்த போட்டியில் வழக்கம்போலவே அபாரமாக விளையாடிய பெங்களூரு புல்ஸ் 36-33 என வெற்றி பெற்று முதலிடத்தை வலுவாக பிடித்து தொடர்ந்து முதலிடத்திலேயே நீடிக்கிறது.

T20 WC: ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் இருவரில் அரையிறுதியில் ஆடப்போகும் விக்கெட் கீப்பர் யார்? ரோஹித் பதில்

புனேரி பல்தான் அணி புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. தமிழ் தலைவாஸ் அணி 5ம் இடத்தில் உள்ளது.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு உடல்நலக்குறைவு, SMAT போட்டிக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதி
சூர்யகுமார், கில்லுக்கு வாழ்வா சாவா போட்டி; தொடரைக் கைப்பற்றுமா இந்தியா..?