புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸிடம் யு மும்பா தோல்வி..! யுபி யோதாஸை வீழ்த்தி ஜெய்ப்பூர் அணி அபார வெற்றி

By karthikeyan VFirst Published Nov 20, 2022, 12:16 AM IST
Highlights

புரோ கபடி லீக் தொடரின் இன்றைய போட்டிகளில் யு மும்பாவை வீழ்த்தி தெலுங்கு டைட்டன்ஸும், யு.பி.யோதாஸை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸும் வெற்றி பெற்றன.
 

புரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று 3 போட்டிகள் நடந்தன. பெங்களூரு, புனேவை தொடர்ந்து இப்போது நடக்கும் போட்டிகள் ஹைதராபாத்தில் நடக்கின்றன.

இன்று நடந்த முதல் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸும் யுபி யோதாஸும் மோதின. இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 42-29 என்ற கணக்கில் யுபி யோதாஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

தொடர்ந்து 4 சதங்கள்.. சங்கக்கராவின் சாதனையை சமன் செய்த தமிழ்நாடு வீரர் ஜெகதீசன்! கழட்டிவிட்டு கதறும் சிஎஸ்கே

அடுத்த போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸும் யு மும்பாவும் மோதின. இந்த தொடரில் சிறப்பாக விளையாடி புள்ளி பட்டியலில் டாப் 4 இடங்களுக்குள் தொடர்ந்து நீடித்துவரும் யு மும்பா அணியை 32-26 என்ற கணக்கில் வீழ்த்தி தெலுங்கு டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.

கடைசி போட்டியில் டபாங் டெல்லியும் பாட்னா பைரேட்ஸும் மோதின. தொடர் தோல்விகளை சந்தித்துவந்த டபாங் டெல்லி இன்றைய போட்டியில் பாட்னா பைரேட்ஸை 30-27 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

ராகுல் டிராவிட்டை விமர்சித்த ரவி சாஸ்திரிக்கு அஷ்வின் பதிலடி

பெங்களூரு புல்ஸ் அணி புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. புனேரி பல்தான் 2ம் இடத்திலும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 3ம் இடத்திலும், யுபி யோதாஸ் அணி 4ம் இடத்திலும் உள்ளன. யு மும்பா அணி 5ம் இடத்திற்கு பின் தங்கிவிட்டது.

click me!