Pro Kabaddi League: அரையிறுதியில் பெங்களூரு புல்ஸை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்

Published : Dec 15, 2022, 08:53 PM IST
Pro Kabaddi League: அரையிறுதியில் பெங்களூரு புல்ஸை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்

சுருக்கம்

புரோ கபடி லீக் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் பெங்களூரு புல்ஸை 49-29 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி ஃபைனலுக்கு முன்னேறியது.  

புரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பல்தான் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறின.

புள்ளி பட்டியலில் அடுத்த 4 இடங்களை பிடித்த பெங்களூரு புல்ஸ், யு.பி யோதாஸ், தமிழ் தலைவாஸ், டபாங் டெல்லி அணிகள் பிளே ஆஃபிற்கு முன்னேறின.  முதல் பிளே ஆஃப் போட்டியில் டபாங் டெல்லியை வீழ்த்தி பெங்களூரு புல்ஸ் அணியும், அடுத்த பிளே ஆஃப் போட்டியில் யு.பி யோதாஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணியும் அரையிறுதிக்கு முன்னேறின. தமிழ் தலைவாஸ் அணி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.

எப்போ எப்படி ஆடணும்னு கோலிக்கு தெரியும்.. அவர் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்..! ராகுல் டிராவிட் புகழாரம்

இன்று அரையிறுதி போட்டிகள் நடக்கின்றன. முதல் அரையிறுதி போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. ஜெய்ப்பூர் - பெங்களூரு ஆகிய 2 அணிகளுமே வலுவான அணிகள் என்பதாலும், இந்தசீசனில் 2 அணிகளுமே அபாரமாக ஆடியதாலும் இந்த போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே பெங்களூரு புல்ஸ் அணி மீது ஆதிக்கம் செலுத்தி ஆடிய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், எந்த சூழலிலும் பெங்களூரு அணியை எழவே விடவில்லை. 

அபாரமாக ஆடிய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, 49-29 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது. புரோ கபடி லீக் முதல் சீசனில் டைட்டில் வென்ற ஜெய்ப்பூர் அணி, 4வது சீசனில் ஃபைனலில் பாட்னா பைரேட்ஸிடம் தோற்று கோப்பையை இழந்தது. இந்த சீசனில் 3வது முறையாக ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது ஜெய்ப்பூர் அணி.

இது வெறும் தொடக்கம் தான்டா தம்பி.. அறிமுக இன்னிங்ஸில் சதமடித்த அர்ஜுன் டெண்டுல்கருக்கு அக்கா சாரா வாழ்த்து

தமிழ் தலைவாஸ் - புனேரி பல்தான் இடையே நடக்கும் அரையிறுதி போட்டியில் ஜெயிக்கும் அணியை ஃபைனலில் ஜெய்ப்பூர் அணி எதிர்கொள்ளும். 
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs SA: வரலாறு படைக்க காத்திருக்கும் விராட் கோலி, பாபர் அசாம் சாதனை சமன் செய்யப்படுமா?
ஹெய்டன் நிர்வாணமாக நடப்பதை தடுத்த ஜோ ரூட்..! கண்களை காப்பாற்றி விட்டதாக ஹெய்டன் மகள் நன்றி!