புரோ கபடி: தபங் டெல்லியை திணறடித்தது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்…

 
Published : Sep 18, 2017, 11:23 AM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
புரோ கபடி: தபங் டெல்லியை திணறடித்தது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்…

சுருக்கம்

Pro Kabaddi dapang has suffered the loss by Jaipur Pink Panthers ...

புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 82-வது ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 36-25 என்ற புள்ளிகள் கணக்கில் தபங் டெல்லி அணியை வீழ்த்தியது.

புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 82-வது ஆட்டம் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி – தபங் டெல்லி அணிகளுக்கு இடையே நேற்று இரவு நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டியது ஜெய்ப்பூர். இதனால் தடுமாற்றத்துடன் ஆடிவந்த டெல்லி முதல் பாதியில் 9-18 என்ற புள்ளிகள் கணக்கில் பின்தங்கியிருந்தது. தொடர்ந்து

நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்திலும் டெல்லியை திணறடித்த ஜெய்ப்பூர் இறுதியில் 11 புள்ளிகள் வித்தியாசத்தில் வென்றது.

ஜெய்ப்பூர் தரப்பில் அதிகபட்சமாக அதன் ரைடர் பவன் குமார் 17 முறை ரைடு சென்று 6 புள்ளிகளை பெற்றார். பின்கள வீரர் சித்தார்த் 5 டேக்கிள் புள்ளிகளை வென்றார்.

டெல்லி தரப்பில் அபோல்ஃபஸல் 12 ரைடுகளில் 5 புள்ளிகள் கைப்பற்றினார். தடுப்பாட்டக்காரர் தபஸ் பால் 3 டேக்கிள் புள்ளிகளை எடுத்தார்.

இந்த ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணி 17 ரைடு புள்ளிகள், 15 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள், 2 கூடுதல் புள்ளிகள் பெற்றது.

டெல்லி அணி 15 ரைடு புள்ளிகள், 9 டேக்கிள் புள்ளிகள், ஒரு கூடுதல் புள்ளி பெற்றது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!
U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!