அசத்தலான ஆட்டத்தால் இங்கிலாந்தை வீழ்த்தியது மே.தீவுகள்…

 
Published : Sep 18, 2017, 11:20 AM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
அசத்தலான ஆட்டத்தால் இங்கிலாந்தை வீழ்த்தியது மே.தீவுகள்…

சுருக்கம்

England defeat by west indies

இங்கிலாந்துக்கு எதிரான ஒரே டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்திற்கு எதிரான ஒரே டி20 கிரிக்கெட் ஆட்டம் சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச தீர்மானித்தது. பேட்டிங் செய்ய வந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியில் எவின் லீவிஸ் அதிகபட்சமாக 28 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 51 ஓட்டங்கள் எடுத்தார்.

அடுத்தபடியாக கிறிஸ் கெயில் 40 ஓட்டங்கள், ரோவ்மென் பாவெல் 28 ஓட்டங்கள் அடித்தனர். சாமுவேல்ஸ் 10 ஓட்டங்கள், வால்டன் 13 ஓட்டங்கள், பொல்லார்ட் 6 ஓட்டங்கள், ஆஷ்லே நர்ஸ் 13 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, இதர வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்பினர்.

இங்கிலாந்து தரப்பில் லியாம் பிளங்கெட், ஆதில் ரஷித் தலா மூன்று விக்கெட்டுகளை எடுத்தனர். டாம் கரான், கிறிஸ் ஜோர்டான் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் அதிகபட்சமாக 43 ஓட்டங்கள் எடுத்தார். ஜோஸ் பட்லர் 30 ஓட்டங்கள், ஜானி பேர்ஸ்டோ 27 ஓட்டங்கள், லியாம் பிளங்கெட் 18 ஓட்டங்கள், ஜோ ரூட் 17 ஓட்டங்கள் எடுக்க, இதர வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் வீழ்ந்தனர்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கெஸ்ரிக் வில்லியம்ஸ், பிரத்வெயிட் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர். சுனீல் நரைன் 2 விக்கெட்டுகள், ராஸ் டெய்லர், ஆஷ்லே நர்ஸ் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

மேற்கிந்தியத் தீவுகளின் சுனீல் நரைன் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!
U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!