
கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் ஜப்பான் வீராங்கணையை வீழ்த்தி, இந்தியாவின் பி.வி.சிந்து வாகைச் சூடினார்.
கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி தென் கொரிய தலைநகர் சியோலில் நேற்று நடைபெற்றது.
இந்தப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் உலகின் 7-ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை எதிர்கொண்டார் இந்தியாவின் பி.வி.சிந்து.
இருவருக்கும் இடையே விறு விறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் 22-20, 11-21, 21-18 என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்று கொரிய ஓபன் போட்டியில் வாகைச் சூடினார்.
கடந்த மாதம் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றில் நஜோமியிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளார் சிந்து.
நஜோமியை 8-வது முறையாக நேருக்கு நேர் சந்தித்துள்ள சிந்து, அதில் 4-வது வெற்றியை பதிவு செய்துள்ளார்.
வெற்றிக்குப் பிறகு சிந்து, "கிளாஸ்கோவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்றில் நஜோமியிடம் தோல்வி கண்டிருந்தேன். எனினும், இந்த இறுதிச்சுற்றின்போது அதுகுறித்த எந்த எண்ணமும் என் மனதில் இல்லை.
அடுத்தடுத்த புள்ளிகளை கைப்பற்ற வேண்டியது முக்கியம் என்று எனக்கு நானே கூறிக் கொண்டேன். எனது ஷாட்களை நான் கட்டுப்படுத்தி ஆட வேண்டியிருந்தது' என்றார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.