சச்சின் - பிரித்வி.. கவாஸ்கர் - பிரித்வி!! கிரிக்கெட் மேதைகளுடனான இளம் வீரரின் ஒற்றுமை

By karthikeyan VFirst Published Oct 4, 2018, 2:52 PM IST
Highlights

இளம் வீரர் பிரித்வி ஷாவின் பேட்டிங் ஸ்டைல் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரை போலவே உள்ளது. பிரித்வி ஷா, அடுத்த சச்சின் டெண்டுல்கராகவே பார்க்கப்படுகிறார்.
 

இளம் வீரர் பிரித்வி ஷாவின் பேட்டிங் ஸ்டைல் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரை போலவே உள்ளது. பிரித்வி ஷா, அடுத்த சச்சின் டெண்டுல்கராகவே பார்க்கப்படுகிறார்.

கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் என மும்பையிலிருந்து இந்திய அணிக்கு கிடைத்த வரப்பிரசாதங்களின் வரிசையில் பிரித்வி ஷாவும் இணைந்துள்ளார். 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியின் கேப்டனாக இருந்து அணியை சிறப்பாக வழிநடத்தி ஜூனியர் உலக கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்த பிரித்வி ஷா, தொடர்ந்து முதல்தர போட்டிகளில் அபாரமாக ஆடி இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம்பெற்ற பிரித்வி ஷா, இன்று ராஜ்கோட்டில் தொடங்கிய முதல் போட்டியில் அறிமுகமானார். அறிமுக போட்டியிலேயே அபாரமாக ஆடி சதமடித்த பிரித்வி ஷா, 134 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

இந்திய அணியில் மாஸ் எண்ட்ரி கொடுத்திருக்கும் மும்பை வீரர் பிரித்வி ஷாவிற்கு இதற்கு முன் மும்பையிலிருந்து இந்திய அணிக்காக ஆடிய ஜாம்பவான்கள் சச்சின் மற்றும் கவாஸ்கருக்கும் இடையேயான ஒற்றுமைகளை பார்ப்போம்.

பிரித்வி ஷா, தனது முதல் ரஞ்சி போட்டி மற்றும் முதல் துலீப் டிராபி போட்டி ஆகியவற்றில் சதம் விளாசியுள்ளார். சச்சின் டெண்டுல்கரும் முதல் ரஞ்சி போட்டி மற்றும் துலீப் போட்டியில் சதம் அடித்திருக்கிறார். 

பிரித்வி ஷா, சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமாவதற்கு முன் 14 முதல் தர போட்டிகளில் ஆடியுள்ளார். சுனில் கவாஸ்கரும் தனது முதல் சர்வதேச போட்டிக்கு முன்னதாக 14 முதல் தர போட்டிகளில் தான் ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!