
ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகத்துக்கு எதிரான அரையிறுதியில் விளையாடவுள்ள மும்பை அணியில் இளம் வீரரான பிருத்வி ஷா களமிறக்கப்பட உள்ளார்.
17 வயதான ஷா, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிகள் இடையிலான கிரிக்கெட் போட்டியில் 546 ஓட்டங்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
மும்பை அணி, மூத்த வேகப்பந்து வீச்சாளரான தவல் குல்கர்னியின்றி அரையிறுதியில் களமிறங்குகிறது. அவர் காயம் காரணமாக அரையிறுதியில் பங்கேற்கவில்லை.
அணி விவரம்:
ஆதித்ய தாரே (கேப்டன்), அபிஷேக் நய்யார், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், சித்தேஷ் லேடு, பிரஃபுல் வகேலா, பிருத்வி ஷா, ஷ்ரதுல் தாக்குர், பல்விந்தர் சிங் சாந்து, துஷார் தேஷ்பாண்டே, ராய்ஸ்டன் தியாஸ், சூஃபியான் ஷேக், விஜய் கோஹில், அக்ஷய் கிராப், ஏக்நாத் கெர்கர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.