பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடக்க விழா வரும் 26 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதில் கலந்து கொள்வதற்காக இந்திய தொழிலதிபர் நீதா அம்பானி பிரம்மாண்டமாக சிவப்பு நிற உடையில் பாரிஸ் சென்றுள்ளார்.
இன்னும் 2 நாட்களில் பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடர் பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. பாரிஸில் செய்ன் நதிக்கரையில் தொடங்கும் தொடக்க விழாவில் விளையாட்டு வீரர்கள் கிட்டத்தட்ட 106 படகுகள் மூலமாக ஊர்வமாக அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய தொழிலதிபரான நீதா அம்பானி பாரிஸ் சென்றுள்ளார்.
undefined
பிரான்ஸ் சென்ற நீதா அம்பானிக்கு அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கையில் முத்தம் கொடுத்து வரவேற்றுள்ளார். ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கு முன்னதாக பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதில், ஒருவராக நீதா அம்பானியும் கலந்து கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அற்புதமான தருணத்தில் நீதா அம்பானி இந்திய கைவினைத்திறன் மற்றும் பாரம்பரியத்தை அழகாக பிரதிபலிக்கும் வகையில் சிவப்பு நிற உடையில் அழகாக தோன்றினார். ஸ்லீவ்ஸ், டிரிம்ஸ், முதுகு மற்றும் உடற் பகுதியை அலங்கரிக்கும் தங்க நிற ஜர்தோசி வேலைப்பாடுகள் கொண்ட சிவப்பு நிற உடையில் வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி – கம்பீர தோரணையோடு அரையிறுதிக்கு சென்ற இந்தியா மகளிர் அணி!
பாரிஸ் 2024 ஒலிம்பிக் இன்னும் 2 நாட்களில் தொடங்க இருக்கிறது. இந்த ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் 16 விளையாட்டுகளில் 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் உள்பட மொத்தமாக 117 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று 69 போட்டிகளில் 95 பதக்கங்களுக்காக போட்டி போடுகின்றனர். அதில், 13 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.