
பிரீமியர் பாட்மிண்டன் லீக் (பிபிஎல்) போட்டியின் 4-வது ஆட்டத்தில் நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் அணியை விட 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது அகமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ் அணி.
பிரீமியர் பாட்மிண்டன் லீக் (பிபிஎல்) போட்டியின் 4-வது ஆட்டம் குவாஹாட்டியில் நேற்று இரவு நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அகமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ் அணி வீரர் எஸ்.வர்மா 15-10, 15-7 என்ற செட் கணக்கில் நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் அணியின் பி.ஜோஷியை வீழ்த்தினார்.
கலப்பு இரட்டையர் பிரிவில், நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் அணியின் பி.சாவந்த் - எஸ்.பி.சியோல் இணை அகமதாபாதின் கே.ஆர் ஜுல் - ரெக்னல்ட் இணையை 15-13, 15-13 என்ற கணக்கில் வீழ்த்தியது.
அதேபோன்று மகளிர் ஒற்றையர் பிரிவில் அகமதாபாதின் டி.டி.யிங் 15-6, 15-10 என்ற செட் கணக்கில் நார்த் ஈஸ்டர்னின் எம்.லீயை வீழ்த்தினார்.
இந்த ஆட்டத்தில் அகமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ் அணி 3-1 என்ற கணக்கில் நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் அணியை விட முன்னிலையில் இருக்கிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.