மூன்று ஆட்டங்களையும் கைப்பற்றி மேற்கிந்திய தீவுகளை வொயிட் வாஷ் செய்தது நியூஸிலாந்து...

Asianet News Tamil  
Published : Dec 27, 2017, 10:34 AM ISTUpdated : Sep 19, 2018, 01:44 AM IST
மூன்று ஆட்டங்களையும் கைப்பற்றி மேற்கிந்திய தீவுகளை வொயிட் வாஷ் செய்தது நியூஸிலாந்து...

சுருக்கம்

New Zealand won the West Indies by Westwood

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3-வது ஒரு நாள் ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் முறையில் 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி பெற்று 3 ஒரு நாள் ஆட்டங்களையும் கைப்பற்றி மேற்கிந்திய தீவுகள் அணியை வொயிட் வாஷ் செய்துள்ளது.

நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தின்போது மழை பெய்ததால் 23 ஓவர்கள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டன. டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது நியூஸிலாந்து. நிர்ணயிக்கப்பட்ட 23 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 131 ஓட்டங்கள் எடுத்தது நியூஸிலாந்து.

இதனையடுத்து, 132 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மே.இ.தீவுகள் அணி 23 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 99 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
 
நியூஸிலாந்து அணியில் அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 54 பந்துகளில் 47 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு அடுத்தபடியாக, கேப்டனும், விக்கெட் கீப்பருமான டாம் லதாம் 37 ஓட்டங்கள் எடுத்தார்.

மே.இ.தீவுகள் அணியின் சார்பில், ஷெல்டன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹோல்டர், மில்லர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இதையடுத்து, களம் இறங்கிய மே.இ.தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரரான கிறிஸ் கெயில், மட் ஹென்றி பந்துவீச்சில் காலின் மன்றோவிடம் கேட்ச் கொடுத்து 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

போல்ட் வீசிய 2-வது ஓவரில் ஷாய் ஹோப் டெய்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, அதற்கு அடுத்த ஓவரில் கைல் ஹோப், ஹென்றி பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகி ஔட்டானார்கள்.

மூன்று விக்கெட்கள் இழப்புக்கு 3-வது ஓவரில் வெறும் 7 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்தது மே.இ.தீவுகள் அணி. இதையடுத்து, களம் இறங்கிய ஜாசன் முகமது, 4-வது ஓவரில் 1 ஓட்டத்தில் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழக்க அதே ஓவரில் தொடக்க ஆட்டக்காரரான வால்டனும் ஆட்டமிழந்தார்.

இப்படி அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை பறிகொடுத்த அந்த அணி வெறும் 9 ஓட்டங்களை மட்டுமே எடுத்து திணறிக் கொண்டிருந்தது. கேப்டன் ஜாசன் ஹோல்டரும், பாவெல்லும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருப்பினும், 11-வது ஓவரில் பாவெல் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து களம் கண்ட ஆஷ்லே நர்ஸ் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அணி 64 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது நீல் ப்ரூமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் கேப்டன் ஹோல்டர். அப்போது அவர் 21 பந்துகளில் 34 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

ஷெல்டன் 9-வது விக்கெட்டாக வெளியேற பந்துவீச்சாளர்கள் மில்லர் 20 ஓட்டங்களுடனும், கேப்ரியல் 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

எனினும், நிர்ணயிக்கப்பட்டிருந்த 23 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் அந்த அணியால் 99 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்திருந்தது.

அதிகபட்சமாக போல்ட், மிச்செல் சாண்ட்னர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஆட்டநாயகனாக ராஸ் டெய்லரும், தொடர் நாயகனாக போல்டும் தேர்வு செய்யப்பட்டனர்.

முன்னதாக, கடந்த 20 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் 2 ஒரு நாள் ஆட்டங்களிலும் நியூஸிலாந்து அணியே வெற்றி பெற்ற நிலையில் 3-வது ஆட்டத்திலும் வெற்றி பெற்று ஒரு நாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இரு அணிகளுக்கு இடையேயான 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

World Cup 2030: அடுத்த உலகக் கோப்பையில் 64 அணிகளா? FIFA தலைவர் கொடுத்த மெகா அப்டேட்!
Vaibhav Suryavanshi: இந்திய அணியில் நீக்கப்பட்டதால் தேம்பி தேம்பி அழுத வைபவ் சூர்யவன்ஷி! வைரல் வீடியோ!