கோலியை விட ரோஹித் சர்மா சிறந்த பேட்ஸ்மேன்..! முன்னாள் வீரர் அதிரடி..!

Asianet News Tamil  
Published : Dec 26, 2017, 05:58 PM ISTUpdated : Sep 19, 2018, 01:44 AM IST
கோலியை விட ரோஹித் சர்மா சிறந்த பேட்ஸ்மேன்..! முன்னாள் வீரர் அதிரடி..!

சுருக்கம்

rohit is the better batsman than kohli said sandeep

இந்திய அணியின் கேப்டன் கோலியைவிட ரோஹித் சர்மாதான் சிறந்த பேட்ஸ்மேன் என முன்னாள் வீரர் சந்தீப் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

உலக அரங்கில் சிறந்த பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் கோலி வலம் வருகிறார். பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் கோலிக்கு நிகராக வலம் வரும் ஒரே வீரர் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தான். கோலி, ஸ்மித்தில் யார் பெஸ்ட் என்றால், ஒருவரை குறிப்பிட்டு சொல்லமுடியாத அளவிற்கு இருவரும் சிறந்தவர்களாக திகழ்கின்றனர்.

ஆனால், தற்போது கோலிக்கு நிகராக பேசப்படக்கூடிய வீரராக ரோஹித்தும் திகழ்கிறார். பேட்டிங் இறங்கி, களத்தில் நின்றுவிட்டால் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு ரோஹித்தை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு ருத்ர தாண்டவம் ஆடிவிடுகிறார்.

திருமணத்திற்காக ஒருமாதம் கோலி ஓய்வில் சென்ற சமயத்தில், தற்காலிக கேப்டனாக செயல்பட்ட ரோஹித், இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரை வென்று அசத்திவிட்டார். கேப்டனாக மட்டுமல்லாமல் பேட்ஸ்மேனாகவும் தன்னை மீண்டுமொரு முறை நிரூபித்தார் ரோஹித்.

ஒருநாள் போட்டியில் மூன்றாவது இரட்டை சதத்தையும் டி10 போட்டியில் அதிவேக சதத்தையும் பதிவு செய்து மிரட்டினார் ரோஹித்.

இந்நிலையில், கோலியைவிட ரோஹித்தான் சிறந்த பேட்ஸ்மேன் என முன்னாள் வீரர் சந்தீப் பாட்டீல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய சந்தீப், நான் சொல்லப்போகும் கருத்து கண்டிப்பாக கோலி ரசிகர்களுக்கு பிடிக்காது என்பது தெரியும். ஆனால் நான் இதை சொல்லியே ஆக வேண்டும். கோலியை விட தற்போதைய சூழலில் ரோஹித் சர்மாதான் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன். இருவரும் தென்னாப்பிரிக்க தொடரில் அசத்துவார்கள் என நம்புகிறேன் என சந்தீப் தெரிவித்துள்ளார்.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs WI: அபிஷேக் - இஷான் ஜோடியா? தோனி ஸ்டைலில் ஒரு அதிரடி முடிவு! விண்டீஸ் போட்டியில் இந்தியாவின் ப்ளேயிங் 11 இதுதான்!
தந்தையின் இறுதி சடங்கு முடித்த கையோடு கண்ணீருடன் களத்தில் இறங்கும் சிங்கம்! கலங்க வைக்கும் அர்ப்பணிப்பு!