அர்ஜூனா விருதுக்கு இளம் செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா பெயர் பரிந்துரை..! பட்டியலில் உள்ள மொத்த வீரர்கள் விவரம்

Published : Nov 07, 2022, 05:43 PM IST
அர்ஜூனா விருதுக்கு இளம் செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா பெயர் பரிந்துரை..! பட்டியலில் உள்ள மொத்த வீரர்கள் விவரம்

சுருக்கம்

இந்தியாவில் விளையாட்டுத்துறையில் சாதித்த வீரர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை பார்ப்போம்.  

விளையாட்டில் சாதித்த வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டு அர்ஜூனா விருது வழங்கி கௌரவித்துவருகிறது மத்திய அரசு. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான அர்ஜூனா விருதுக்கு, அந்தந்த விளையாட்டு சங்கங்கள் தங்கள் விளையாட்டில் சாதித்த வீரர், வீராங்கனைகளின் பெயர்களை பரிந்துரைத்துள்ளது.

டி20 உலக கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தான்.. இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்தை எச்சரிக்கும் மேத்யூ ஹைடன்

தமிழகத்தை சேர்ந்த இளம் செஸ் சாம்பியனான பிரக்ஞானந்தா மற்றும் பக்தி குல்கர்னி ஆகிய இருவரது பெயர்களையும் இந்திய செஸ் கூட்டமைப்பு, அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைத்துள்ளது. இந்த ஒரே ஆண்டில் உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மாக்னஸ் கார்ல்சனை 3 முறை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா. சர்வதேச செஸ் ஒலிம்பியாடில் அருமையாக ஆடி தனிநபர் பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார். தமிழகத்தை சேர்ந்த இளம் செஸ் சாம்பியனான பிரக்ஞானந்தா அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்:

சீமா புனியா (தடகளம்)
எல்தோஸ் பால் (தடகளம்)
அவினாஷ் சேபிள்(தடகளம்)
லக்‌ஷ்யா சென் (பேட்மிண்டன்)
ஹெச்.எஸ்.பிரனாய் (பேட்மிண்டன்)
அமித் பங்கால் (பாக்ஸிங்)
நிகத் ஜரீன் (பாக்ஸிங்)
பக்தி குல்கர்னி (செஸ்)
பிரக்ஞானந்தா (செஸ்)
தீப் கிரேஸ் எக்கா (ஹாக்கி)
ஷுஷிலா தேவி (ஜூடோ)
சாக்‌ஷி குமாரி (கபடி)
நயன் மோனி சைக்கியா (லான் பௌல்ஸ்)
சாகர் ஓஹால்கர்
இளவேனில் வாளறிவன் (துப்பாக்கிச்சுடுதல்)
ஓம் பிரகாஷ் மிதர்வால் (துப்பாக்கிச்சுடுதல்)

டி20 உலக கோப்பை: பாகிஸ்தான் ஜெயிக்கணும்னா நீ இதை செய்தே தீரணும்! கேப்டன் பாபர் அசாமுக்கு அஃப்ரிடி எச்சரிக்கை

ஸ்ரீஜா அகுலா (டேபிள் டென்னிஸ்)
விகாஸ் தாகூர் (பளுதூக்குதல்)
அன்ஷு மாலிக் (மல்யுத்தம்)
சரிதா மோர் (மல்யுத்தம்)
பர்வீன் (Wushu)
மானஷி ஜோஷி (பாரா பேட்மிண்டன்)
தருண் தில்லான் (பாரா பேட்மிண்டன்)
ஸ்வப்னில் பாட்டீல் (பாரா நீச்சல்)
ஜெர்லின் அனிகா (காதுகேளாதோர் பேட்மிண்டன்)

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Asian Games 2026: ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை!
Asian Games 2026: சிக்ஸர் மழை பொழிந்த இந்திய மகளிர் அணி.. ஆசிய விளையாட்டில் புதிய சாதனை ஸ்கோர்!