ஜூனியர் ஆண்கள் ஹாக்கி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பிஆர் ஸ்ரீஜேஷ் நியமனம்!

By Rsiva kumar  |  First Published Aug 9, 2024, 1:31 PM IST

ஜூனியர் ஆண்கள் ஹாக்கி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பிஆர் ஸ்ரீதேஷ் நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஹாக்கி இந்தியாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.


பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் 30 தங்கம், 38 வெள்ளி மற்றும் 35 வெண்கலப் பதக்கம் என்று மொத்தமாக 103 பதக்கங்களை கைப்பற்றி அமெரிக்கா பதக்கப் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. சீனா 73 பதக்கங்களுடன் 2ஆவது இடத்தில் உள்ளது. இதே போன்று ஆஸ்திரேலியா 45 பதக்கங்களுடன் 3ஆவது இடம் பிடித்துள்ளது. இதுவரையில் இந்தியா 4 வெண்கலப் பதக்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் என்று மொத்தமாக 5 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 64ஆவது இடத்தில் உள்ளது.

ஹாக்கி போட்டியிலிருந்து ஓய்வு அறிவித்த பிஆர் ஸ்ரீஜேஷ்: யார் இந்த ஸ்ரீஜேஷ்? சாதனைகள் என்ன?

Tap to resize

Latest Videos

நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்தியா வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொண்டது. இதில், ஹாக்கி இந்தியா அணியின் கேப்டனான ஹர்மன்ப்ரீத் சிங் அடுத்தடுத்து 2 கோல் அடிக்கவே இந்தியா 2-1 என்று முன்னிலை பெற்று வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது. குரூப் சுற்று போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டும் இந்தியா தோல்வியை தழுவியது. இதைத் தொடர்ந்து காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்தியா விளையாடும் போட்டிகள் நாள் 14: மல்யுத்த போட்டியில் இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்க வாய்ப்பு!

ஆனால், அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் 2-3 என்று இழந்து வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்றது. இதில், ஸ்பெயினை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது. ஹாக்கி இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து அணியின் கோல் கீப்பர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடந்த 1988ஆம் ஆண்டு கேரளாவில் கொச்சியில் பிறந்து வளர்ந்த பிஆர் ஸ்ரீஜேஷ், 2006 ஆம் ஆண்டு ஹாக்கி இந்தியா அணியில் இடம் பெற்றார். எனினும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் கோல் கீப்பராக இடம் பெற்று விளையாடி வந்துள்ளார். 2016 ஆம் ஆண்டு ஹாக்கி இந்தியா அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றார். அதன் பிறகு சில ஆண்டுகளில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். கடந்த 2021 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஸ்ரீஜேஷ் உதவியுடன் வெண்கலப் பதக்கம் வென்றது.

நீரஜ் சோப்ராவின் சாதனை பயணம் பற்றி தெரியுமா?

ஹாக்கி இந்தியா அணியில் சிறந்த பங்களிப்பை அளித்ததன் மூலமாக கேல் ரத்னா விருது பெற்றுள்ளார். இந்த நிலையில் தான் ஹாக்கி இந்தியா அணியில் கோல் கீப்பராக இருந்த ஸ்ரீஜேஷ் ஹாக்கி போட்டியிலிருந்து நேற்று ஓய்வு அறிவித்தார். இதைத் தொடந்து ஜூனியர் ஹாக்கி இந்தியா அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பிஆர் ஸ்ரீதேஷ் நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஹாக்கி இந்தியாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ளது.

இது குறித்து ஹாக்கி இந்தியா கூறியிருப்பதாவது: லெஜண்ட் மற்றொரு லெஜண்டரி நகர்வை நோக்கி பயணம் செய்கிறார். ஜூனியர் ஆண்கள் ஹாக்கி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பி ஆர் ஸ்ரீஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். விளையாடுவது முதல் பயிற்சி வரை அனைத்து இளைஞர்களையும் ஊக்கப்படுத்துகிறீர்கள். உங்கள் பயிற்சி காலத்தை நாங்கள் எதிர்நோக்குகிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.

ஒருமுறை ஈட்டி வாங்க பணம் இல்லை, இன்று ஒலிம்பிக் சாம்பியன் – பாக்., வீரர் அர்ஷாத் நதீம் 92.97மீ புதிய சாதனை!

ஹாக்கி இந்தியா பொதுச் செயலாளர் போலாநாத் சிங் கூறியிருப்பதாவது: "கோல் கீப்பர் பி.ஆர். ஸ்ரீஜேஷ் தனது கடைசிப் போட்டியில் விளையாடினார், ஆனால் ஸ்ரீஜேஷ் ஜூனியர் இந்திய ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருப்பார் என்பதை நான் அறிவிக்க விரும்புகிறேன். இதை நாங்கள் SAI மற்றும் இந்திய அரசாங்கத்துடன் விவாதிப்போம்... என்று கூறினார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hockey India (@hockeyindia)

 

click me!