
தேசிய அளவிலான 'விளையாடு இந்தியா' போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் சென்னையைச் சேர்ந்த ரித்திக் ரமேஷ் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான 'விளையாடு இந்தியா' போட்டியில் துப்பாக்கி சுடுதலில் சென்னையைச் சேர்ந்த ரித்திக் ரமேஷ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
விளையாடு இந்தியா போட்டியின் 3-வது நாளில், மருத்துவர் கர்னி சிங் ஷூட்டிங் ரேஞ்சில் சிறுவர்களுக்கான 10மீ ஏர் ரைஃபிள் சுடும் போட்டி நடைபெற்றது.
இதில், கோலாப்பூரின் சாஹு மானே தங்கமும், சென்னையின் ரித்திக் ரமேஷ் வெள்ளியும், டெல்லியின் பர்த் மகிஜா வெண்கலமும் வென்றனர்.
அதேபோன்று சிறுமிகளுக்கான 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவில் சண்டீகரின் ஜீனா கிட்டா முலிடமும், புணேவின் நந்திதா சுல் 2-ஆம் இடமும், இந்தூரின் யானா ரத்தோர் 3-ஆம் இடமும் பிடித்தனர்.
மற்றொரு பிரிவான சிறுமிகளுக்கான ஹாக்கி போட்டி டெல்லியில் தயான்சந்த் மைதானத்தில் வெள்ளிக்கிழமை 'ஏ' பிரிவில் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் அரியாணா 3-0 என்ற கோல் கணக்கில் உத்தரப் பிரதேசத்தை வென்றது. பி பிரிவில் பஞ்சாப் 7-2 என்ற கணக்கில் ஒடிஸாவை வென்றது. ஆட்டங்களில் ஜார்க்கண்ட் 12-0 என சத்தீஸ்கரையும், சண்டீகர் 4-1 என டெல்லியையும் வீழ்த்தின.
சிறுவர்களுக்கான ஹாக்கி பிரிவில் பஞ்சாப் 10-1 என ராஜஸ்தானை வென்றது. சண்டீகர் 2-1 என உத்தரப் பிரதேசத்தை வென்றது. அரியாணா 2-1 என ஒடிஸாவையும், கர்நாடகம் 3-2 என டெல்லியையும் வென்றன.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.