சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் யூகி பாம்ப்ரி, ஜோர்டான் தாம்சன் பங்கேற்பு...

 
Published : Feb 03, 2018, 11:58 AM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் யூகி பாம்ப்ரி, ஜோர்டான் தாம்சன் பங்கேற்பு...

சுருக்கம்

Chennai Open Challenger Tennis Yuki Bhambri Jordan Thomson Participation ...

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி மற்றும் ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

சென்னையில் வரும் 12-ஆம் தேதி தொடங்கும் சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில்இந்தியாவின் யூகி பாம்ப்ரி மற்றும் ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இதில் உலகின் 94-ஆம் நிலை வீரரான தாம்சன் போட்டித் தரவரிசையில் முதலிடத்திலும், உலகின் 111-ஆம் நிலை வீரரான பாம்ப்ரி 2-ஆவது இடத்தில் இருப்பதாக தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது.

ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ஸ் போட்டித் தரவரிசையில் 3-வது இடமும், தென் கொரியாவின் சூன்வூ குவோன் 4-வது இடமும் வழங்கப்படலாம்.

இந்தப் போட்டியில் இதர இந்தியர்களான சாகேத் மைனேனி, சுமித் நாகல், பிரஜனேஷ் கன்னேஸ்வரன் ஆகியோர் பிரதான சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளனர். அவர்கள் தவிர, மேலும் 4 இந்தியர்களுக்கு வைல்டு கார்டு வாய்ப்பு மூலம் நேரடி பிரதான சுற்று வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

இப்போட்டிக்கான தகுதிச்சுற்றுகள் வரும் 10-ஆம் தேதி தொடங்குகிறது. இறுதி ஆட்டம் 17-ஆம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IPL Auction 2026: சிஎஸ்கே வாங்கிய வீரர்கள் யார்? யார்? CSK அணி வீரர்கள் முழு பட்டியல் இதோ!
IPL Auction 2026: விலை போன வீரர்கள் யார்? யார்? விலை போகாத வீரர்கள் யார்? யார்? முழு லிஸ்ட் இதோ!