இந்தியன் ஓபன் பேட்மிண்டன் தொடர் ! ஸ்பெயின் வீராங்கனையை கதற விட்ட பி.வி.சிந்து செமி பைனலுக்கு முன்னேற்றம் !!

 
Published : Feb 03, 2018, 11:30 AM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
இந்தியன் ஓபன் பேட்மிண்டன் தொடர் ! ஸ்பெயின் வீராங்கனையை கதற விட்ட பி.வி.சிந்து செமி பைனலுக்கு முன்னேற்றம் !!

சுருக்கம்

P.V.cindu in semi final Indian open batminten

இந்தியன் ஓபன் பேட்மிண்டன் தொடரில் நடப்பு சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஸ்பெயின் வீராங்கனையை  வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்

இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.  நேற்று நடைபெற்ற  முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்தியாவின் சாய்னா நேவால் 10-21, 13-21 என்ற நேர் செட்டில் அமெரிக்காவைச் சேர்ந்த  பீவென் ஜாங்கிடம் வீழ்ந்தார்.

பந்தை அடிக்கடி வெளியே அடித்துவிட்டு தவறிழைத்ததால் சாய்னாவினால் 32 நிமிடங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் போய் விட்டது. பீவென் ஜாங்குக்கு எதிராக 4-வது முறையாக மோதிய சாய்னா அதில் சந்தித்த முதல் தோல்வி இது தான்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் நடப்பு சாம்பியன் பி.வி.சிந்து , ஸ்பெயினைச் சேர்ந்த பீட்ரிஸ் கோரலெஸ்சுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

54 நிமிடங்கள் நடந்த பரபரப்பான இந்த மோதலில் சிந்து 21-12, 19-21, 21-11 என்ற செட் கணக்கில் பீட்ரிசை தோற்கடித்து அரைஇறுதியை எட்டினார். அரைஇறுதியில் சிந்து, தாய்லாந்தைச் சேர்ந்த முன்னாள் உலக சாம்பியன் ராட்சனோக் இன்டானோனை எதிர்கொள்கிறார்.

அவருக்கு எதிராக சிந்து இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி அதில் 4-ல் தோல்வி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IPL Auction 2026: சிஎஸ்கே வாங்கிய வீரர்கள் யார்? யார்? CSK அணி வீரர்கள் முழு பட்டியல் இதோ!
IPL Auction 2026: விலை போன வீரர்கள் யார்? யார்? விலை போகாத வீரர்கள் யார்? யார்? முழு லிஸ்ட் இதோ!