பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு தேதி வெளியாகி உள்ளது.
2024-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தும் கலந்துகொண்டார். மல்யுத்தத்தில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய அவர், பைனலில் 50 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட இருந்தார். அதற்கு முன்னதாக நடைபெற்ற உடல் எடை பரிசோதனையில் 50 கிலோவை விட 100 கிராம் அதிகமாக இருந்ததால் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அவருக்கு எந்த பதக்கமும் கிடைக்காமல் போனது. இந்த விவகாரம் மாபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வினேஷ் போகத் தன் உடல் எடையை குறைக்க இரவு முழுவதும் உடற்பயிற்சி செய்திருக்கிறார். அதுவும் பலனளிக்காததால் அவரது முடியை வெட்டியும், ஆடையை குறைத்தும் பார்த்துள்ளனர். அதுவும் பலனளிக்கவிலை என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்.. வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்த இளம் இந்திய வீரர் அமன் செராவத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து!
வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து விளையாட்டு தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று இரவு தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதியில் அந்த வழக்கின் தீர்ப்பு வருகிற ஆகஸ்ட் 13-ந் தேதி மாலை 6 மணிக்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதில் வினேஷ் போகத்துக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கக்கோரி தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை வினேஷ் போகத்துக்கு சாதகமான தீர்ப்பு வெளியானால் இந்தியாவுக்கு கிடைக்கும் இரண்டாவது வெள்ளிப்பதக்கம் இதுவாக இருக்கும். இதற்கு முன்னர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்.. Olympic Gold Medal Price: பாரிஸ் 2024 ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா?